புதுவையில் சர்வதேச குறும்பட திருவிழா


பாஞ்சோ இந்தியா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ‘லெட்ஸ் டான்ஸ்’ திரைப்படத் திருவிழா புதுச்சேரியில் மே 21ம்தேதி மாலை 7 மணிக்கு பாண்டிச்சேரி அலையன்ஸ் ஃப்ரான்சைஸ் அரங்கில் நடைபெற்றது. க்ளெர்மாண்ட்-ஃபெர்ராண்ட் சர்வதேச குறும்படத் திருவிழாவில் திரையிடப்பட்ட இப்படத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட நடனக் காட்சிகள் ஒளிபரப்பாகின.  நடனம் குறித்த குறும்படங்கள், தனிப்பட்ட, நாடகத்தனமான, நகைச்சுவையான, உணர்வுப்பூர்வமான அல்லது அதிரடியான சில அசத்தல் விவரங்களைக் காட்சிப்படுத்தப்பட்டன. அனைத்து நடன ஸ்டைல்களும் அவற்றின் மூலங்களுடன்,  தேர்ந்தெடுக்கப்பட்ட அகலப் பரப்புக் காட்சியாக திரையிடப்பட்டன. பாஞ்சோ இந்தியாவின் ஓர் அங்கமாக விளங்கும் ‘லெட்ஸ் டான்ஸ்’, ஃப்ரான்ஸ் தூதரகம் மற்றும் அதன் கலாச்சாரச் சேவைப் பிரிவான இன்ஸ்டிடியூட் ஃப்ராங்கைஸ் என்டி, அலையன்ஸ் ஃப்ரான்சைஸ் நெட்வொர்க், ஃப்ரான்ஸ் நாட்டு கான்சொலேட்கள் ஆகியவற்றின் கலை, கலச்சாரம், கல்வி மற்றும் இலக்கிய முனைவாகும்.


குறும்படங்களுக்கான மிகப் பெரிய பன்னாட்டுத் திரைப்படத் திருவிழாவாக க்ளெர்மாண்ட் - ஃபெர்ராண்ட் சர்வதேச குறும்படத் திருவிழா விளங்குகிறது.  ஒவ்வொரு ஆண்டும் ஃப்ரான்ஸ் நாட்டின் க்ளெர்மாண்ட் - ஃபெர்ராண்ட்டில் நடைபெறும் இத்திருவிழா, கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அடுத்த இரண்டாவது பெரிய திரைப்படத் திருவிழா ஆகும். 160000 ரசிகர்கள் மற்றும் 3500  தொழில்முறைக் கலைஞர்கள் இதில் பங்கேற்றுச் சிறப்பிப்பார்கள்.  புதுச்சேரியில் நடைபெற்ற லெட்ஸ் டான்ஸ் திருவிழாவில் பல குறும்படங்கள் திரையிடப்பட்டன.  தங்கி அர்ஜெண்டினி  என்னும் குறும்படம் அலுவலக எழுத்தர் ஒருவன் டேங்கோ நடனத்தை கற்றுக் கொள்வதைப் பற்றிய கதையாகும். குறிப்பிட்ட தேதியில் திட்டமிட்டபடி நடைபெறாமல் போகவே விசித்திரமான பயணத்தை மேற்கொள்கிறான். கைடோ தைஸ் இயக்கிய பெல்ஜியன் குறும்படத்தை எளிதில் புரிந்து கொள்ள வசதியாக ஆங்கில வசனங்கள் திரையில் ஓடின.


இத்திருவிழாவில் பாரிஸ் கிப் அண்ட் ஃபோரெண்ட் ஹேமொன் இயக்கிய  பேல்ட்ஸ் ஆஃப் பீலிட்ஸ், பார்ஸ் கிப் & ஃப்ளோரெண்ட் ஹாமொன் இயக்கிய விட்னி ஹூஸ்டன்,  டாஃபேன் லக்கர் இயக்கிய சிஸ்டர்ஸ், ஃபேனி லியடர்ட் அண்ட் ஜெரெமி ட்ரௌத் இயக்கிய ப்ளூ டாக், ஜீன் சார்ல்ஸ் அண்ட் எம்போடி மெலோலோ இயக்கிய தி சென்ஸ் ஆஃப் டச், க்ளெமெண்ட் கோகிடோர் இயக்கிய கேலண்ட் இண்டீஸ் ஆகிய குறிப்பிடத்தக்க பொழுதுபோக்குக் குறும்படங்களும் இடம்பெற்றன, என்று பாண்டிச்சேரி அல்லையன்ஸ் ஃப்ரான்சைஸ் இயக்குனர் லிலா கெர்னோவா தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :