சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிக பலன்களை கொண்ட கூட்டு பிராண்ட் கிரெடிட் கார்டை வழங்கும் ஐசிஐசிஐ

 சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிக பலன்களை கொண்ட

கூட்டு பிராண்ட் கிரெடிட் கார்டை வழங்கும் ஐசிஐசிஐ


ந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கிரிக்கெட் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ்  உடன் இணைந்து கூட்டு பிராண்ட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி இன்று அறிவித்துள்ளது. ’சென்னை சூப்பர் கிங்ஸ் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு என அழைக்கப்படும் இந்த கார்டு, பிரபலமான அணியின் மில்லியன் கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்காக பிரத்யேக சலுகைகளுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய அட்டை, விளையாட்டு ஆர்வலர்களுக்கு தங்களுக்கு பிடித்த அணிகளுடன் இணைவதற்கும், கிரெடிட் கார்டின் பலன்களை பெறுவதற்கும் வங்கியால் வழங்கப்படும் பிரத்யேகமான கூட்டு பிராண்ட் கிரெடிட் கார்டுகளின் மற்றொரு கூடுதல் அம்சமாகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஐசிஐசிஐ வங்கி இங்கிலாந்தின் தொழில்முறை கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் உடன் இணைந்து பிராண்டட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியது.


இந்த கூட்டு செயல்பாடு குறித்து ஐசிஐசி வங்கியின் பாதுகாப்பில்லாத சொத்து பிரிவின் தலைவர்  சுதிப்தா ராய் கூறுகையில், "சிஎஸ்கே உடன் இணைந்து கூட்டு பிராண்ட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.  இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து பிரத்யேக சலுகைகள் மற்றும் தனித்துவமான வங்கி சலுகைகள் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த கார்டு இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் விளைவாகும். மேலும் சிஎஸ்கே ரசிகர்கள் அதை மிகவும் விரும்புவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.


சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட், தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் கூறுகையில், ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து கூட்டு பிராண்ட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த கூட்டு செயல்பாடு, நாடு முழுவதும் உள்ள எங்கள் ரசிகர்களுக்கு பலனளிக்கும். மேலும் மஞ்சள் நிறத்தை எங்கும் பரவச் செய்யும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :