ஆஞ்சியோபிளாஸ்டி நோயாளிக்கு கவர் ஸ்டென்ட் பொருத்தி மதுரை அப்போலோ மருத்துவமனை சாதனை

 

மதுரை, மார்ச் 26: நவீன சிகிச்சையில் முன்னோடியாகத் திகழும் மதுரை அப்போலோ மருத்துவமனை, இருதய சிகிச்சையில் மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. அப்போலோ சிறப்பு மருத்துவமனை தற்போது இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான ஆஞ்சியோபிளாஸ்டி நோயாளிக்கு கவர்  ஸ்டென்ட் பொருத்தி சாதனை படைத்துள்ளது.


மதுரை அப்போலோ மருத்துவமனையில், இருதயவியல் துறை டாக்டர் S.K.P.கருப்பையா அவர்களை 64 வயது மதிக்கதக்க  ஒரு இதய நோயாளி சில நாட்களுக்கு முன் ஆலோசனை பெற சந்தித்தார். அந்த நோயாளி தன் இதய நோய்க்கான முறையான ஆஞ்சியோ   பிளாஸ்டி சிகிச்சையை ஏற்கனவே வேறு மருத்துவமனையில் ஒன்பது மாதத்திற்கு முன்பு பெற்றிருந்தார். இருப்பினும் கடந்த மூன்று மாதங்களாக அவருக்கு அடிக்கடி நெஞ்சு வலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. நாட்கள் செல்லச் செல்ல அவருக்கு வலி அதிகமாகியதால் அப்போலோ மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற வந்தார். மீண்டும் அவருக்கு  ஆஞ்சியோகிராம் எடுத்து பார்த்தபோது இருதயத்திற்கு இரத்தம் செலுத்தக்கூடிய முக்கிய இரத்த நாளத்தில் ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த ஸ்டென்டில் இருந்து இரத்தக் கசிவும், வீக்கமும் ஏற்பட்டிருந்தது. அந்த வீக்கம் மிகவும் பெரிதாகி பலுான் போன்று வீங்கி இருப்பது கண்டறியப்பட்டது. அந்த பலுான் போன்ற வீக்கம் உடைந்தால் நோயாளியின் உயிருக்கே உடனடி ஆபத்தாகிவிடும்.


இதனை சரிசெய்ய டாக்டர் S.K.P.கருப்பையா ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த ஸ்டென்டினுள் மேலும் ஒரு கவர் ஸ்டென்ட் என்ற ஸ்டென்டினை பொருத்தி அந்த இரத்தக் கசிவையும், வீக்கத்தையும் உடனடியாக சரிசெய்து உயிர் காக்கும் சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளார். ஆஞ்சியோபிளாஸ்டியை செய்து கொண்டவர்  சிகிச்சைக்குப் பின் 2 நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.


இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, மருத்துவ நிர்வாகி டாக்டர். பிரவீன் ராஜன், மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் கே. மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :