டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மதுரை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர்  

 டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மதுரை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் திரு.பா.அருண்சத்யா அவர்களால் மதுரை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மதுபான சில்லறை விற்பனை கடை எண் .5587 - ல் மதுபான வகைகளை அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக ரூ .70 / - வைத்து விற்பனை செய்ததால் கடையின் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது , மேலும் , மதுபான சில்லறை விற்பனை கடை எண் -5588 , 06.10.2021 அன்று திடீர் தணிக்கை மேற்கொண்டபோது மதுபான வகைகளை அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக ரூ .200 / - வைத்து விற்பனை செய்ததும் , கடைக்கு சம்பந்தமில்லாத அந்நிய நபர்கனை பணிபுரிய அனுமதித்ததும் கண்டறியப்பட்டதால் , கடையின் மேற்பார்வையாளர் திரு.எண்.ராஜா மற்றும் விற்பனையாளர்கள் திரு.பி.வேல்பாண்டி மற்றும் திரு.இளமாறன் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் . அத்துமீறி கடையில் பணிபுரிந்த நபர்கள் மீது மதுரை தெற்கு மாவட்ட மேலாளரால் எஸ்.எஸ்.காலணி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . மதுபானக் கடைகளில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக மதுபானங்களை விற்பனை செய்தாலும் , அந்நிய நபர்களை கடையில் பணிபுரிய அனுமதித்தாலும் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரின் உத்தரவின்படி . மதுரை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மதுபான சில்லறை விற்பனை கடை எண் -5200 ஐ 06.10.2021 அன்று காலை 10.00 மணியளவில் மதுரை தெற்கு மாவட்ட மேலாளர் திடீர் தணிக்கை மேற்கொண்டபோது , விற்பனை தொடங்கப்படாத நிலையில் கையிருப்பு தொகை ரூ .59,880 / - கண்டறியப்பட்டது . இது தொடர்பாக கடைப்பணியாளர்கள் அனைவருக்கும் விளக்கம் கேட்கும் குறிப்பானை வழங்கப்பட்டு மேல் நடவடிக்கை தொடரப்பட்டு வருகிறது . மேலும் , கடைகளில் பணக்குறைபாடு மற்றும் மதுபான வகைகளை அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் திரு.பா.அருண்சத்யா எச்சரிக்கை விடுத்துள்ளார் 

Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :