மின் நுகர்வோர் சேவை மையம் அலைபேசி எண் .9498794987 -ல் பெறப்படும் புகார்களை

 மின் நுகர்வோர் சேவை மையம் அலைபேசி எண் .9498794987 -ல் பெறப்படும் புகார்களை சென்னை - மின்னகம் தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட மின் பகிர்மான வட்டங்களுக்கு கணினி மூலம் அனுப்பப்படுகிறது . இவ்வாறு அனுப்பப்படும் புகார்களை மின் பகிர்மான வட்ட அளவில் 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்திலிருந்து சம்பந்தப்பட்ட உதவி பொறியாளருக்கும் மற்றும் பல்வேறு உயரதிகாரிகள் கொண்ட வாட்ஸ்அப் குரூப்பிற்கும் அனுப்பப்படுகிறது . பெறப்பட்ட புகார்கள் எந்த வகையானது என கள ஆய்வு செய்து உடனுக்குடன் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . பெறப்பட்ட புகார்களுக்கு தீர்வு கண்டவுடன் சம்பந்தப்பட்ட பிரிவு பொறியாளர் , வட்ட அளவில் செயல்படும் மின்னகத்திற்கு வாட்ஸ்அப் ( கட்செயலி ) வாயிலாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி விளக்கமாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது . இவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட நுகர்வோரிடமே வட்ட அளவில் செயல்படும் மின்னகம் மூலமாக உறுதிபடுத்தப்பட்டவுடன் புகார்கள் முடித்து வைக்கப்படுகின்றன . மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு அனைத்து தரப்பு அலுவலர்களாலும் கண்காணிக்கப்படுகிறது . எனவே பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமான புகார்களுக்கும் , உதவிக்கும் மின்னகம் -மின் நுகர்வோர் சேவை எண்ணை ( 9498794987 ) தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . சம்பந்தப்பட்ட மேலும் பொதுமக்கள் தங்களுடைய மின் இணைப்பு தொடர்பான சரியான தொலைபேசி எண்ணை சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தில் சரிபார்த்து தேவையெனில் புதுப்பித்துக் கொள்ளவும் . அதனால் தங்களுடைய பகுதிகளில் ஏற்படும் மாதாந்திர மின் பராமரிப்பு மற்றும் மின் தொடர் செயலிழப்பு , உத்தேசிக்கப்பட்ட மின்தடை , மின்நுகர்வோர் கட்டணம் சம்பந்தமான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம் .

Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :