5 ஜி நெட்வொர்க்கில் இந்தியாவின் முதல் கிளவுட் கேமிங் சோதனையைவழங்கும் ஏர்டெல்

 5 ஜி நெட்வொர்க்கில் இந்தியாவின் முதல் கிளவுட் கேமிங் சோதனையைவழங்கும் ஏர்டெல் 

 5 ஜி நெட்வொர்க்கில் இந்தியாவின் முதல் கிளவுட் கேமிங் சோதனையைவழங்கும் ஏர்டெல் 


 தொலைத்தொடர்புதுறையில்  5ஜி சேவையை வழங்கும் இந்தியாவின்முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் பாரதி ஏர்டெல் லிமிடெட் (”ஏர்டெல்”) இந்தியாவின்முதல் கிளவுட் கேமிங் அமர்வை 5ஜி சூழலில் வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.தொலைத்தொடர்புத் துறையால் (இந்திய அரசு) ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரத்தைப் பயன்படுத்தி5ஜி சோதனைகளின் ஒரு பகுதியாக இந்த சோதனை மானேசரில் (குர்கான்) நடத்தப்பட்டது. 


இந்த 5ஜி க்ளவுட்கேமிங் சோதனைக்காக ஏர்டெல் இந்தியாவின் முன்னனி கேமர்களான மார்டல், (நமன் மாதுர்) மற்றும்மாம்பா (சல்மான் அஹமது) ஆகியோருடன் இணைந்துள்ளது. பிளாக்நட்டிலிருந்து கேமிங் டெக்னாலஜிதளத்தை மேம்படுத்தி, ஆஸ்ஃபால்ட்டில் ஒரு வேகமான ரேசிங் பந்தயத்தை மார்டல் மற்றும் மாம்பாஆகியோருக்கு வழங்கியது. அவர்கள் அதிவேகமான மற்றும் மிகக் குறைந்த தாமதங்களைத் தரும்5 ஜி சூழலில் தங்களின் கேமிங் திறன்களை சோதித்தனர். 


கேமிங் அனுபவத்தைவிவரித்துப் பேசிய மார்டல் மற்றும் மாம்பா, "நாங்கள் முற்றிலும் மெய்சிலிர்த்துவிட்டோம்.இது ஸ்மார்ட்போனில் உயர்நிலை கணினி மற்றும் கன்சோல்-தர கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.5 ஜி இந்தியாவில் ஆன்லைன் கேமிங்கை சிறந்த உயரத்திற்கு எடுத்துச் செல்லும். மற்றும்இந்தியாவிலிருந்து விளையாட்டுகளை மிகப்பெரும் அளவில் உருவாக்கவும் கேம்களை வெளியிடவாய்ப்புகளை வழங்கும். மேலும் சிறிய நகரங்களிலிருந்து திறமையான விளையாட்டு வீரர்களைபெருநகரங்களுக்கு கொண்டு வரும் என்று நாம் நம்பிக்கையுடன் கூறலாம். இந்த அருமையான வாய்ப்பைஎங்களுக்கு அளித்த ஏர்டெல் நிறுவனத்திற்கு நன்றி” எனத் தெரிவித்தனர். 


3500 மெகாஹெர்ட்ஸ் உயர் திறன் கொண்ட ஸ்பெக்ட்ரம் பேண்டுடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் மார்டல்மற்றும் மாம்பா இந்த சிறந்த அமர்வை அனுபவித்தனர். 5ஜி சோதனை நெட்வொர்க் ஒரு நொடிக்கு1ஜிபிக்கும் அதிகமான வேகத்தையும் 10 மில்லி விநாடிகளின் வரம்பில் தாமதத்தையும் வழங்கியது. 


கிளவுட் கேமிங் பயனர்களை இவற்றை பதிவிறக்கம் செய்யாமல் அல்லதுகேமிங் ஹார்ட்வேரில் முதலீடு செய்யாமல் ரியல் டைமில் ஸ்ட்ரீம் செய்யவும் மற்றும் கேம்களைவிளையாட அனுமதிக்கிறது. 5ஜி நெட்வொர்க்குகளின் வருகையுடன், க்ளவுட் கேமிங் புதிய இயல்பாகமாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயனர்கள் உயர்நிலை கன்சோல்கள் வழங்கும் கேமிங்அனுபவத்தை ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் அனுபவிக்க முடியும். இந்தியா,அதன் பரந்த இளைஞர் மக்கள் தொகை, வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் ஊடுருவல் மற்றும் 5 ஜிநெட்வொர்க்குகள் மொபைல் கேமிங் ஆகியவை 2.4 பில்லியன் டாலர் சந்தை வாய்ப்பாக உருவாகும்.இந்தியாவின் 436 மில்லியன் ஆன்லைன் விளையாட்டாளர்கள் 2022 க்குள் 510 மில்லியனை எட்டும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


பாரதி ஏர்டெலின்சிடிஓ, ரன்தீப் செக்கோன் பேசுகையில், "கிளவுட் கேமிங் 5ஜியின் மிகப்பெரிய பயன்பாட்டுநிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும். இது அதிவேகம் மற்றும் குறைந்த தாமதம் ஆகியவற்றின் கலவையாகும்.சோதனை நெட்வொர்க்கில் இந்தியாவின் முதல் 5 ஜி டெமோவை வழங்கிய பிறகு, இந்த அற்புதமான5 ஜி கேமிங் அமர்வை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகின் மற்றொரு பகுதியில்அமர்ந்திருக்கும் ஒருவருடன் நிகழ்நேர கேமிங்கை அனுபவிப்பதை கற்பனை செய்து பாருங்கள்.இந்தியாவில் 5 ஜி-யை வெளியிடுவதற்கு ஏர்டெல் தயாராகும் நிலையில், இது ஒரு அற்புதமானடிஜிட்டல் எதிர்காலத்தின் தொடக்கமாகும்” எனத் தெரிவித்தார். 


இந்த ஆண்டின்தொடக்கத்தில், துறையில் முதல் முறையாக ஏர்டெல் 5ஜி சேவைகளை ஹைதராபாத்தில் லைவ் 4ஜிநெட்வொர்க்கில் வெற்றிகரமாக நிரூபித்தது. இது இந்தியா முழுவதும் பல நகரங்களில் 5ஜிசோதனைகளை நடத்துகிறது மற்றும் டெலிகாம் துறையால் ஒதுக்கப்பட்ட சோதனை ஸ்பெக்ட்ரம் மூலம்தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாட்டு வழக்குகளை சரிபார்க்கிறது. இந்த சோதனைகளுக்காகஏர்டெல் எரிக்சன் மற்றும் நோக்கியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. 


ஏர்டெல் 5ஜிதீர்வுகளை உருவாக்க இந்தியாவில் O-RAN அலையன்ஸ் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.இது ஏற்கனவே டாடா குழுமம், குவால்காம், இன்டெல், மாவெனிர் மற்றும் அல்டியோஸ்டார் ஆகியவற்றுடனானஅதன் கூட்டாண்மையை அறிவித்துள்ளது.

Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :