ரசிகர்கள் கொண்டாடும் Netflix உடைய "நவரசா" ஆந்தாலஜி, பாராட்டு மழையில் படைப்பாளிகள் !*


 *ரசிகர்கள் கொண்டாடும் Netflix   உடைய "நவரசா" ஆந்தாலஜி, பாராட்டு மழையில் படைப்பாளிகள்  !*

சமீபத்தில் Netflix   தளத்தில் வெளியாகியுள்ள  "நவரசா" ஆந்தாலஜி தொடரை, ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க இந்த தொடர் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. திரைத்தொழிலாளர்களின் நலனுக்காக, தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்த தருணத்தை, இந்திய சினிமாவின் பொன் தருணமாக, ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 10 நாடுகளில் இந்த தொடர்   Netflix   தளத்தில் முதல் 10 இடத்தில்  உள்ளது.

இந்திய திரைத்துறையின் பெருமை மிகு படைப்பாளியாக கொண்டாடப்படும் இயக்குநர் மணிரத்னம் பற்றும் முக்கிய படைப்பாளி  ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.

மனித  உணர்வுளான  கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு  ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும்  ஆந்தாலஜி தொடராக, இந்த தொடர் உருவாகியுள்ளது. தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், ஆளுமைமிக்க இயக்குநர்கள் பங்களிப்பில், இந்தியாவின் மிக முக்கிய பொன் தருணமாக இப்படைப்பு அரங்கேறியுள்ளது.

Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :