இதய வால்வுகளில் உள்ள அடைப்புகளுக்கான சிகிச்சைகளில் HD இமேஜிங் உத்தியை தென்தமிழ்நாட்டில் முதன்முறையாகப் பயன்படுத்தும்  மீனாட்சி மிஷன் மருத்துவமனை


 இதய வால்வுகளில் உள்ள அடைப்புகளுக்கான சிகிச்சைகளில் HD இமேஜிங் உத்தியை தென்தமிழ்நாட்டில் முதன்முறையாகப் பயன்படுத்தும் 

மீனாட்சி மிஷன் மருத்துவமனை 

HD (45 Mhz) இன்ட்ரா வாஸ்குலர் அல்ட்ராசவுண்டு கதீட்டர் (IVUC) எனப்படும்  இமேஜிங்  முறையை பயன்படுத்துவதன் மூலமும், இரத்தநாளங்கள் குறுகியிருப்பதை மதிப்பிடும்   கருவியான இன்ஸ்டன்ட் ஃபுளோ ரிசர்வ் (iFR)  மூலமும்,  50 வயதான ஒரு நோயாளிக்கு செய்யப்பட்ட ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சையின் பலன் சிறப்பாக இருக்கிறது. 

மதுரை, ஜுலை 26, 2021: தமனிகளில் இரத்த ஓட்டத்தை தடுக்கின்ற  பிளேக்குகள் மீது துல்லிய இமேஜ்களை உருவாக்குவதற்கு  45 Mhz அல்ட்ராசவுண்டு கதீட்டரை 50 வயதான ஒரு ஆண் நோயாளி மீது மதுரையில் உள்ள  மீனாட்சி மிஷன் மருத்துவமனை சமீபத்தில் பயன்படுத்தியிருக்கிறது. ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சையின் பலன்கள்  சிறப்பாக  கிடைப்பதை உறுதி செய்திருக்கும் இந்த உத்தி, தென்தமிழ்நாட்டில் முதல் முறையாக செயல்படுத்தப்பட்டிருக்கிறது. 

இன்ட்ராவஸ்குலர் அல்ட்ராசவுண்டு கதீட்டர் (IVUC) எனப்படும் இந்த நவீன சாதனத்தோடு சேர்த்து , இரத்தநாளங்கள் இயல்புக்கு மாறாக குறுகி  இரத்த ஓட்டம்  மட்டுப்படும் பாதிப்பையும்  மதிப்பீடு செய்ய இன்ஸ்டன் ஃபுளோ ரிசர்வ் (iFR) என அழைக்கப்படும் கருவியையும்,  முதல் முறையாக   ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறையில் இம்மருத்துவமனை பயன்படுத்தியிருக்கிறது.  


திரு. காசி என்ற இந்நோயாளிக்கு ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவரது இடது முன்புற கீழ் தமனியில் இரு அடைப்புகள் இருந்தது கண்டறியப்பட்டது. அவரது இதயத்திற்கு இரத்த  ஓட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு மற்றொரு ஆஞ்சியோபிளாஸ்டி அவருக்கு தேவைப்பட்டது. எனினும், மிகக்குறைவான ஊடுருவல் உள்ள இந்த சிகிச்சையை தாக்குப்பிடிக்கும் அளவிற்கு அவரது இதயத்திற்கு திறனிருக்கிறதா என்பது நிச்சயமற்றதாக இருந்தது. இத்தகைய சூழலில், இதயவியல்  துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஆர். சிவக்குமார் தலைமையிலான மருத்துவக்குழு,  பிளேக்குகளின் வடிவம்,  அளவு மற்றும் ஸ்டென்ட் பொருத்துவதற்காக  தமனியில் துல்லியமான பகுதியை அளவிடுவது ஆகியவற்றை மிகத் துல்லியமாக பகுப்பாய்வு செய்வதற்கு IVCS மற்றும் iFR ஆகிய இரண்டு உத்திகளையும் பயன்படுத்தியது. இதயத்திற்கு அவசியமற்ற அழுத்தம் ஏற்படுவதை முற்றிலும் தவிர்த்து, அதிகமாக பயனளிக்கும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை  இந்நோயாளிக்கு வடிவமைத்து செயல்படுத்தியது. 

இதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஆர். சிவக்குமார் இந்த அறுவைசிகிச்சை குறித்துப் பேசுகையில், "ஆஞ்சியோபிளாஸ்டிக்கான அறுவைசிகிச்சை திட்டத்தை முடிவு செய்வதற்கு முன்னதாக  பிளேக்குகளின்   அமைவிடம் மற்றும் அளவினை புரிந்துகொள்ளவும், கரோனரியின்  மீதான மேப்பிங்கை துல்லியமாக செய்யவும் IVUC மற்றும் iFR எங்களுக்கு சிறப்பாக உதவின. இதன்மூலம் இந்நோயாளிக்கு சிறப்பாக பயனளிக்கக்கூடிய  பலூன் ஆஞ்சியோபிளாஸ்ட்டி மற்றும் ஸ்டென்ட் பொருத்துதலை வெற்றிகரமாக செய்ய முடிந்தது" என்று கூறினார். “இந்த ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையில்  காஸ்மெட்டிக் அம்சங்களை  மட்டுமின்றி, இரத்தவோட்டவியல் காரணிகளையும் நாங்கள் கவனத்தில் கொண்டோம். இதன்மூலம் இந்த  சிகிச்சையின் பயனளிக்கும் திறனை வெகுவாக நாங்கள் மேம்படுத்தினோம்,” என்று அவர் குறிப்பிட்டார். 

கரோனரி தமனிகள் இதய தசைகளுக்கு இரத்தத்தை அனுப்புகின்றன என்று சுட்டிக்காட்டிய அவர், கொழுப்பு, கொலஸ்ட்ரால், கால்சியம் மற்றும் இரத்தத்தில் காணப்படும் பிற பொருட்களால் உருவாகின்ற பிளேக்குகள் பெரிதாகி வளரும்போது, கரோனரி தமனிகள் குறுகுவது அல்லது அவற்றில் அடைப்புகள் ஏற்படுவது நடக்கிறது என்று விளக்கமளித்தார். இத்தகைய அடைப்புகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வழிமுறைகளில் கார்டியாக் ஸ்டென்ட்களைப் பயன்படுத்துவது ஒரு வழிமுறையாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

“எனினும், ஒரு ஸ்டென்ட்டைப் பொருத்துவதற்கு முன்பு, தமனிகள் மற்றும்  பிளேக்குகளின்   மீதான மதிப்பீட்டை தெளிவாக செய்வது  முக்கியம். இதற்குத்தான் இன்ட்ராவஸ்குலர் அல்ட்ராசவுண்டு இமேஜிங் முறை பரவலாக பயன்படுத்தப்படுகிறது. IVUC சாதனங்கள், ஒலி அலைகளின் உதவியோடு கரோனரி தமனிகளின் உட்புறங்கள் மீதான படங்களை உருவாக்குகின்றன. 

மாநிலத்தின் இப்பகுதியில் உள்ள மருத்துவமனைகள், குறைவான அலைவெண் கொண்ட (வழக்கமாக 20 MHz அல்லது அதற்கும் குறைவாக ) IVUC – ஐ மட்டுமே பயன்படுத்தும்போது, தமனிகளில் அடைப்பை ஏற்படுத்துகிற  பிளேக்குகளை துல்லியமாக  பார்க்கும் திறனை அதிகரிக்கின்ற  45 Mhz அலைவெண் திறனுள்ள தீர்வை நாங்கள் அறிமுகம் செய்திருக்கிறோம். இந்த உயர் துல்லிய (HD) தீர்வு தெளிவான, துல்லியமான படங்களை உருவாக்குகிறது; தமனிகள் மற்றும் இரத்த  பிளேக்குகளின் மீது  துல்லியமான மதிப்பீட்டைப் பெறுவதற்கும்  ஏதுவாக்குகிறது. உடலியல் சார்ந்த கரோனரி மேப்பிங்கிற்கும், தமனியில் ஸ்டென்ட் பொருத்தியதற்குப் பிறகு இரத்தஅழுத்தத்தை  கணிப்பதற்கும் மிக நவீன தொழில்நுட்பங்களை நாங்கள் பயன்படுத்தினோம்,” என்று டாக்டர். ஆர். சிவக்குமார் விளக்கமளித்தார். 

 

இந்த  விரிவான சிகிச்சை திட்டமிடலானது ,ஆஞ்சியோபிளாஸ்ட்டி செய்யப்பட்ட நோயாளிக்கு சிறப்பான சிகிச்சையை  வழங்குவதற்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு உதவியிருக்கிறது. சிகிச்சைக்குப் பிறகு வெகுவிரைவில் மிக நன்றாக குணமடைந்திருக்கும் இவரால் எவ்வித சிரமமின்றி தற்போது அனைத்து வழக்கமான செயல்பாடுகளையும் மேற்கொள்ள முடிகிறது.

Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :