குழந்தைகளுக்கான முழுமையான பராமரிப்பு மையத்தை தொடங்கிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை ~ குழந்தைகளின் உடல் மற்றும்



குழந்தைகளுக்கான முழுமையான  பராமரிப்பு மையத்தை தொடங்கிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை
 
~  குழந்தைகளின் உடல் மற்றும் மனநல முன்னேற்றத்திற்காக தென் தமிழகத்தில்  முதன்முறையாக  தொடங்கப்பட்ட  மையம் இதுவே ~
 
மதுரை, 19 ஜுலை, 2021: தென் தமிழகத்தில் பன்முக சிறப்பு பிரிவுகளைக் கொண்டு  சுகாதார  சேவையை வழங்கி வரும் முன்னணி மருத்துவமனையான மதுரையில் உள்ள  மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC),  குழந்தைகளின் முழுமையான முன்னேற்றத்திற்காக  ஒரு மையத்தை இன்று தொடங்கியிருக்கிறது. ஒரே இடத்தில் குழந்தைகளுக்கான  எல்லா  பராமரிப்பு சேவைகளையும்  வழங்குவதே இந்த மையத்தின் நோக்கமாகும். இப்புதிய மையமானது,  மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர். ரமேஷ் அர்த்தநாரி மற்றும் மருத்துவ நிர்வாகி  டாக்டர். B. கண்ணன் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. 
 
மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பிரத்யேக மையமானது, திறன்மிக்க வளர்ச்சிக்காக  குழந்தைநல மருத்துவரின் ஆலோசனை, குழந்தைகளுக்கான மூளை நரம்பியல், மனநலவியல்,  எலும்பு முறிவியல், காது  மூக்கு தொண்டை சிகிச்சை, கண் சிகிச்சையியல், மரபணுவியல் மருத்துவம், பேச்சுத்திறன் சிகிச்சை, இயன்முறை மருத்துவம், தொழில் சார்ந்த சிகிச்சை, மற்றும் சிறப்பு கல்வியாளர் சேவை ஆகியவற்றை வழங்கும். பிறப்பிலிருந்தே உடல் மற்றும் மனநல    குறைபாடுகள் கொண்ட குழந்தைகள்  மீது இந்த மையம்  சிறப்பு கவனம் செலுத்தும்.  வளர்ச்சிக்கான ஆண்டுகளின் போது அவர்களது சிறப்பான திறன்களை அவர்கள் அடைவதற்கு இந்த மையம் உறுதுணையாக இருக்கும். வளர்ச்சி அடைவதில் பிரச்சனைகளை கொண்டிருக்கிற குழந்தைகளுக்கு அவர்களது திறனிழப்புகளினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு உதவி வழங்கப்படும்.

Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :