மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சேக்கிபட்டி உதவி காவல் நிலையத்தை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் திறந்து வைத்தார்


மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சேக்கிபட்டி உதவி காவல் நிலையத்தை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் திறந்து வைத்தார் . மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சேக்கிபட்டி உதவி காவல் நிலையத்தை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் இன்று ( 16.07.2021 ) திறந்து வைத்து தெரிவிக்கையில் : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க சேக்கிபட்டி மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டத்திற்கு எல்லையில் அமைந்துள்ள சேக்கிபட்டி கிராமத்தில் காவல் உதவி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது . பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்கவும் , பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் இந்த சேவை மையம் மிகவும் பயனுள்ளதாக அமையும் . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்த நடவடிக்கையால் தமிழ்நாட்டில் நாள்தோறும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000 - லிருந்து தற்போது 2,500 - ஆக குறைந்துள்ளது . மேலும் , மதுரை மாவட்டத்தில் மிகவும் உச்சத்தில் இருந்த கொரோனா நோய்தொற்றானது தற்போது மிகவும் குறைந்துள்ளது . மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று அதிகமாக இருந்த நேரத்தில் சுமார் 4,000 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு கிராமப்புறங்களில் விடு வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது . மேலும் , 420 பட்சிகளில் சுமார் 120 ஊராட்சிகளில் 10 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா கவனிப்பு மையம் ஆரம்பிக்கப்பட்டது . இதுபோன்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததன் மூலம் கொரோனா நோய்தொற்று கட்டுக்குள் வந்தது . கொரோனா நோய்தொற்று அதிகமாக இருந்த நேரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதில் உயிரிழப்பை தவிர்ப்பதற்காக இரவு - பகல் பாராமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்ஸிஜன் எளிவூட்டிகளையும் பெற்று மக்களை காப்பாற்றினார் . பல்வேறு தன்னார்வலர்கள் உதவியுடன் மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது . அனைத்து தாலுகா மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் நிறுவப்பட்டுள்ளன . ஆள் மாறாட்டம் , போலி பத்திரங்கள் தயாரிப்பதை ஒழிக்க பத்திரப்பதிவுத்துறையில் கடந்த 1 மாதங்களாக தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . பதிவுத்துறையில் பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்யும் நேரத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் என்னுடைய தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு குறைகளைக் கூறலாம் என்று தெரிவித்தார் . இந்நிகழ்ச்சியில் , காவல் கண்காணிப்பாளர் திரு.வி.பாஸ்கரன் இ.ஆ.ப. , அவர்கள் , சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.வெங்கடேசன் ( சோழவந்தான் ) அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர்

Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :