ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

 திருமங்கலம் பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் அசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.


விழாவிற்கு மதுரை மாவட்ட கலெக்ட்  அன்பழகன் தலைமை தாங்கினார்.
விழாவில் அமைச்சர் ஆ.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2 ஆயிரத்து 52 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசும் போது கூறியதாவது,மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தது. அ.தி.மு.க அரசு மகளிர்களுக்கு கடன் உதவி வழங்குவதில் முன்னுரிமை தந்தது. தற்போது நீர் மேலாண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புரட்சி செய்து வருகிறார். தொழில் வளர்ச்சியில் மற்றும் நிர்வாக வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.கொரோனா நோயாளிகளுக்கு அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மு:லம் 125வது நாளாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்ப கால கட்டங்களில் தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. தற்போது 820 பேருக்கு சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகம் கொரோனோவை கட்டுப்படுத்துவதில் முன்மாதிரியாக விளங்குகிறது, என கூறினார்.நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள்  சரவணன், நிதிபதி பெரியபுள்ளான், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் தமிழழகன், ஒன்றிய செயலாளர் அன்பழகன்,  மு.வட்ட மீனவர் பிரிவு செயலாளர் சரவணன், மு.வட்ட எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணி செயலாளர் கவி காசிமாயன், வழக்கறிஞர்கள் முத்துராஜா. வெங்கடேஸ்வரன், ஆணைச் செயலாளர் சமதி சாமிநாதன், ஜெகநாதன் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநர் - திட்ட இயக்குநர் பிரபாகர், ரூட்செட் பயிற்சி நிலைய இயக்குனர்  ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Popular posts
புரோஸ்டேட் புற்றுநோயைப் பற்றி மருத்துவர்களின் அறிவுரை
சிறுநீரக நோய் வராமல் தடுக்க விழிப்புணர்வு அவசியம் மதுரை கிட்னி மைய டாக்டர் தினகரன் தகவல்
Image
கொரோனாவால்  சரிந்துள்ள  பொருளாதாரத்தை மீட்கவும், மத்திய மாநில அரசுகள் நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை  செயல்படுத்த விரைந்து  நடவடிக்கை  எடுக்க பொறியாளர் ஏசி காமராஜ் வலியுறுத்தல் 
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image
ஃப்ளேம்  பல்கலைக்கழகம் நடத்திய உயர் தாக்க தொழில்முனைவோர் மற்றும் புதுமை  மாநாடு
Image