மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை : தலைவர் பி.ராஜசேகரன் பேட்டி


 


மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிரானைட் நிறுவனங்கள் தொழில் நடத்த தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட கிரானைட் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மதுரை செய்தியாளர் அரங்கத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த கிரானைட் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பி.ராஜசேகரன் கூறியதாவது:-கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கிரானைட் நிறுவனங்களின் விதிமீறல் என மதுரை மாவட்ட ஆட்சியரால் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்பேரில் குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. மதுரை மாவட்டத்தில் அப்போது செயல்பட்டு வந்த 175 கிரானைட் குவாரிகளில் 84 குவாரிகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டன. இதன் மீதான வழக்கு விசாரணை முடியும் வரை மீதமுள்ள 91 குவாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசின் உத்தரவு காரணமாக இயங்காத 91 குவாரிகளுக்கும்  தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஏன் தொழில் நடைபெறவில்லை என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்குரிய விளக்கத்தை நாங்கள் அளித்துள்ளோம். கடந்த 8 ஆண்டுகளாக  வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில் சில வழக்குகளில் இன்னும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்படவில்லை இதன் காரணமாக எங்களது தொழில் மிகவும் நலிவடைந்து உள்ளது. இதனை சார்ந்து வாழும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது.பிற மாவட்டங்களில் தங்குதடையின்றி கிரானைட் குவாரிகள் நடைபெற்று வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் மட்டும் இந்த தடை நீடிப்பது மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசு மறு விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும்   எங்களது தொழில் தடையின்றி நடைபெறுவதற்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உத்தரவிட வேண்டுகிறோம், எனக்கூறினார்.


Popular posts
புரோஸ்டேட் புற்றுநோயைப் பற்றி மருத்துவர்களின் அறிவுரை
கொரோனாவால்  சரிந்துள்ள  பொருளாதாரத்தை மீட்கவும், மத்திய மாநில அரசுகள் நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை  செயல்படுத்த விரைந்து  நடவடிக்கை  எடுக்க பொறியாளர் ஏசி காமராஜ் வலியுறுத்தல் 
Image
ஓரியண்ட் எலெக்ட்ரிக் அறிமுகப்படுத்தும் இன்வெர்டர் ஐ-வரிசை மின்விசிறி
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image
ஃப்ளேம்  பல்கலைக்கழகம் நடத்திய உயர் தாக்க தொழில்முனைவோர் மற்றும் புதுமை  மாநாடு
Image