ஆளும் அமைச்சர்களும் ,அதிகாரிகளும் பயனடையும் வகையில் நடைபெறும் திட்டம் தான் ஸ்மார்ட் சிட்டி திட்டம் - இதற்கான தண்டனை அவர்களுக்கு விரைவில் கிடைக்கும் என பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி.
மதுரை மத்திய தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் , திமுக மாநில தகவல் தொழில் நுட்பத் துறை செயலாளருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மற்றும் சித்திரை வீதிகளில் கருங்கற்கள் பதிக்கும் பணிகளை ஆய்வு செய்தார், தனது காலில் காலனி அணியாமல் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்,
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கருங்கற்கள் பதிக்கும் வேலை தேவையில்லாதது எனவும், திருட்டுக்காக, ஊழலுக்காக செய்யப்பட்ட திட்டம் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம், உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்கும் போதும் அந்த தொகுதி எம்.பி. எம். எல்.ஏ கொண்ட ஒரு குழுவை உருவாக்கி ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பதே சட்ட விதி. ஆனால் மக்களுக்கு விரோதமாக இதை எதையுமே செய்யாமல் தொகுதி எம்.பி, எம்.எல்.ஏவை கலந்து ஆலோசிக்காமல் ஆளும் அமைச்சர்களும், அதிகாரிகளும் பயனடையும் வகையில் இந்த ஸ்மார்ட் சிட்டி பணியில் பெரிய ஊழல் நடந்துள்ளது எனவும், ஆட்சி மாற்றம் மூலம் இதற்கு சரியான தண்டனை கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.