வேலைவாய்ப்பு பெற்ற நந்தா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளின் மாணவர்களுக்கு பாராட்டு


ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் வேலைவாய்ப்பு துறையின் சார்பாக கடந்த கல்வியாண்டில் பல்வேறு பன்னாட்டு மற்றும் தேசிய அளவிளான நிறுவனங்கள் வேலைவாய்ப்பு தேர்வுகளை நடத்தியது. இத்தகைய தேர்வுகள் மூலமாக வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களை இணையம் மூலமாக பாராட்டும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு  நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர்  சண்முகன்  தலைமை தாங்கி வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசுகையில், எங்களது கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைகளின் மூலம் இந்த கல்வியாண்டின் முடிவில் விப்ரோ, காப்ஜெமினி, இன்போசிஸ், காக்னிசன்ட், டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ், ஜ.வி.டி.எல் இன்போ வீவ், பிரேக்ஸ் இந்தியா, லூக்கஸ் டிவிஎஸ், போன்ற சுமார் 119க்கும் மேறபட்ட நிறுவனங்கள் வருகைபுரிவதற்கு வழிவகை செய்து சுமார் 1519 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்துள்ளோம் என்றார். இச்சாதனை புரிவதற்கு அயராது பாடுபட்ட மாணவர்களுக்கும் அவர்தம் பெற்றோர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், எங்களது கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பினை பெறுவதற்கு முதலாம் ஆண்டு முதலே மாணவர்களது தனிதிறனை மேம்படுத்தும் பொருட்டு பாடத்திட்டத்தில் ஆங்கில மொழி தொடர்பு திறன் மற்றும் தலைமை பண்புகளை வளர்க்க வல்ல பயிற்சிகள் வெகு சிறப்பாக வழங்கப்பட்டு வருவதே ஆகும். மேலும் மாணவர்களின் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கும் பொருட்டு, வேலைவாய்ப்பினை எளிதாக பெற  நடப்பு சூழலுக்கேற்ப பொறியியல் துறையில் பட்டியலிடப்பட்ட பாடங்களிலிருந்து மாணவர்கள் ஒரு பருவத்திற்கு தேவையான ஏதாவது இரண்டு பாடங்களை சுயமாக தேர்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன் பொருட்டு தங்களது பாடங்களுக்கான ஆசிரியர்களை தாங்களே தேர்வு செய்து, அவர்கள் மூலமாக செய்முறை அடிப்படையிலான விஷயங்களை கற்பதற்கு வழிவகை செய்கிறது எங்களது நந்தா கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு உலகெங்கும் வேலைவாய்ப்பினை பெற்று வாழ்வில் மேன்மை அடைய ஹிந்தி உட்பட ஜெர்மன், இத்தாலி, ஜப்பானீஸ் போன்ற மொழிகள் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்றும் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். மாணவர்களுக்கு பல்வேறு வகையில் ஊக்கமும் பயிற்சியும் கொடுத்து உறுதுணையாக இருந்த எங்களது சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைகளின் ஆசிரியர்கள், அனைத்து முதல்வர்கள், துறைத்தலைவர்கள், மற்றும்;  ஆசிரியர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.   பின்னர் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர்  நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர்  திருமூர்த்தி, முதன்மை நிர்வாக அதிகாரி  ஆறுமுகம் மற்றும் நந்தா பொறியியல் கல்லூரியின் முதல்வர்  ரெங்கராஜன ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பணி நியமனம் பெற்ற மாணவர்களுக்கும் அவர்தம் பெற்றோர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Popular posts
மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற கோவிட்-19 விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நிறைவு
Image
ஈரோடு மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2020 சிறப்பு தள்ளுபடி விற்பனைக்கு ரூ.2.70 கோடி இலக்கு: ஆட்சியர் கதிரவன் தகவல்
Image
அக்.10ம்தேதி டிஜிட்-ஆல் சங்கமம் மெய்நிகர் உச்சி மாநாடு
Image
செல்லம்பட்டி ஒன்றியத்தில் கழகத் தலைவரின் விழியசைவில் வெற்றிகரமாக நடைபெறும்  இணைய  வழி உறுப்பினர் சேர்க்கை : கிராமம் கிராமமாக ஆர்வத்துடன் திமுகவில் உறுப்பினராகும் பொதுமக்கள் 
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image