செல்லம்பட்டி ஒன்றியத்தில் கழகத் தலைவரின் விழியசைவில் வெற்றிகரமாக நடைபெறும்  இணைய  வழி உறுப்பினர் சேர்க்கை : கிராமம் கிராமமாக ஆர்வத்துடன் திமுகவில் உறுப்பினராகும் பொதுமக்கள் 

 தி.மு.க.,வின் முப்பெரும் விழாக் கொண்டாட்டத்தையொட்டி, பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் “எல்லோரும் நம்முடன்” எனும் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பைத் தொடங்கியது தி.மு.க!


அடுத்த 45 நாட்களில், குறைந்தது 25 இலட்சம் புதிய ஆன்லைன் உறுப்பினர்களைத் தி.மு.க.வில் இணைக்க கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திட்டமிடப்பட்ட து. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தி.மு.கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உள்ள மக்களை இப்பணிக்காகச் சந்தித்து வருகின்றனர். கடைக்கோடி கிராமம் வரை இணையத்தின் பாய்ச்சல் நிகழ்ந்துவருகிறது.


இவ்வேளையில், தி.மு.க.,வில் உறுப்பினராகச் சேர விரும்புவோரின் கனவை எளிமைப்படுத்தும் நோக்கில், இணையம் வழியாகவே கழக உறுப்பினராவதற்கான வாய்ப்பை எல்லோருக்கும் இந்த முயற்சி வழங்குகிறது. 18 வயது நிறைவடைந்த எவரும் https://www.dmk.in/joindmk என்ற இணையதளத்தில் சென்று அதில் கேட்கப்பட்ட விவரங்களைப் பதிந்து தி.மு.க.,வில் உறுப்பினராகச் சேரலாம்.இணையம் வழியாக உறுப்பினர் ஆவோர் இதற்கென எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. வழக்கமான உறுப்பினர்களுக்கு உள்ள அதே பொறுப்புகளும் உரிமைகளும் இணையம் வழியாக உறுப்பினராகும் அனைவருக்கும் உண்டு. எனினும், இணையம் வழியாக உறுப்பினரானோர், உட்கட்சித் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை பெற வேண்டுமெனில் - இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் உள்ளூர் கழகப் பிரதிநிதியால் நேரில் சரிபார்க்கப்படுவதுடன் கழக விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு - இணையம் வழியாக சேரும் உறுப்பினர் ஓராண்டை நிறைவு செய்ய வேண்டும். அப்படியில்லை எனில், சம்பந்தப்பட்ட இணைய உறுப்பினர் 25 தகுதியான நபர்களைக் கழகத்தில் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும்.

சாமானியர்களால் சாமானியர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம், மாறிவரும் சூழல்களுக்கேற்ப, காலந்தோறும் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டும் தகவமைத்துக்கொண்டும் வந்துள்ளது. தமிழர் உரிமைகளின் பாதுகாவலனாகவும் தமிழ்ப் பண்பாட்டின் தலைமைப் பிரதிநிதியாகவும் திகழ்ந்துவரும் தி.மு.க., வளமான எதிர்காலத்தை நோக்கி, தமிழ்நாட்டைச் செலுத்தும் எண்ணத்துடன், தனது “எல்லோரும் நம்முடன்” என்ற இந்த உறுப்பினர் சேர்க்கை மூலம், அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்து ஒன்றிணைக்க முயல்கிறது.

அந்த வரிசையில் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.  செல்லம்பட்டியில் எல்லோரும் நம்முடன் இணையவழி  திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு செல்லம்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் சுதாகரன் தலைமை தாங்கினார்.முகாமில் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திமுகவில் உறுப்பினராக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் வழங்கினார்.


இதில் மாவட்ட துணைச்செயலாளர் சிவனாண்டி, மாவட்ட விவசாய அணி செயலாளர் பி.டி. மோகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், ஒன்றிய கவுன்சிலர் சிவசாந்தி பன்னீர்செல்வம்,கிளை செயலாளர்கள் ரமேஷ்,சாமிநாதன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் தங்கம், சங்கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts
புரோஸ்டேட் புற்றுநோயைப் பற்றி மருத்துவர்களின் அறிவுரை
சிறுநீரக நோய் வராமல் தடுக்க விழிப்புணர்வு அவசியம் மதுரை கிட்னி மைய டாக்டர் தினகரன் தகவல்
Image
கொரோனாவால்  சரிந்துள்ள  பொருளாதாரத்தை மீட்கவும், மத்திய மாநில அரசுகள் நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை  செயல்படுத்த விரைந்து  நடவடிக்கை  எடுக்க பொறியாளர் ஏசி காமராஜ் வலியுறுத்தல் 
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image
ஃப்ளேம்  பல்கலைக்கழகம் நடத்திய உயர் தாக்க தொழில்முனைவோர் மற்றும் புதுமை  மாநாடு
Image