பாஜக சார்பில் எலத்தூர் பேரூராட்சி பகுதிகளில் ஆயுஷ்மான் பாரத் வழங்கல்

 பாஜக சார்பில், ஈரோடு வடக்கு மாவட்டம் நம்பியூர் வடக்கு ஒன்றியம், எலத்தூர் பேரூராட்சி உட்பட்ட கோரமடை புதூர், கோரமடை காலனி மற்றும் வேட்டையும்பாளையம் பகுதிகளில் குடும்ப அட்டை உள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு 2 கோடி ரூபாய்க்கு பிரதமர்  மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆயுஷ்மான் பாரத் வழங்கப்பட்டது. இதில் நம்பியூர் வடக்கு ஒன்றிய தலைவர் கதிரேஷ்குமார், வடக்கு மாவட்ட துணைத்தலைவர் வெள்ளியங்கிரி ஒன்றிய செயலாளர் பிரகாஷ் அமைப்பு சாரா பிரிவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி மகளிர் அணி ஒன்றிய செயலாளர் விஜயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.