தென்தமிழக்தில் முதன்முறையாக  மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளுக்கு வலிப்பு நோய் அறுவை சிகிச்சை செய்து சாதனை!!


 


வலிப்பு நோய் (கால்-கை / காக்கை வலிப்பு)  என்பது ஒரு பொதுவான தீவிரமான நரம்பு நோயாகும், உலகளவில் 60 மில்லியன் மக்கள் இந்த வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மக்களில் 80-90% மக்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த வலிப்பு நோய் பெரும்பாலும் மருந்து மாத்திரைகளில் கட்டுப்படுத்தப்படுகிறது. எனினும் 30% வலிப்பு நோயாளிகள் மருந்துகளினால் மட்டும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. வலிப்பு நோய் குறித்து பல மூடநம்பிக்கைகள் மக்கள் மத்தியில் பரவலாக உண்டு. அவற்றில் சில பின்வருமாறு, வலிப்பு நோய்க்கு நிரந்திர தீர்வு கிடையாது மற்றும் வலிப்பு நோய்க்கு மருந்து மாத்திரைகளைத் தவிர வேறு மருத்துவம் கிடையாது. இவை இரண்டுமே தவறு. தீராத வலிப்பு நோயை அறுவை சிகிச்சை கொண்டு  குணப்படுத்தலாம். அவ்வாறு தீராத வலிப்பு நோய் கொண்ட இரண்டு குழந்தைகளுக்கு மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி  சாதனை செய்துள்ளனர்.


 


சமீபத்தில் சிவகங்கை மற்றும் தென்காசியை சேர்ந்த இரண்டு குழந்தைகள் வலிப்பு நோய் காரணமாக அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரு குழந்தைக்கு தினமும் 100 - 200 வலிப்புகள் வரும் மற்றும் அந்த குழந்தைக்கு 6 வலிப்பு நோய் மருந்துகள் கொடுத்தும் நோய் கட்டுக்குள் வரவில்லை. அவ்விருகுழந்தைகளுக்கும் உயரிய மருத்துவ கருவிகளின் (4K Ultra High Definition Zeiss Microscope, Intraoperative ECoG, MEP monitoring and Brain navigation techniques) உதவியுடன் அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு  மைலோமெனிங்கோசெல் எனப்படும் முதுகு நாண் பிறவி குறைபாடு இருந்துள்ளது.


 


இந்த அறுவை சிகிச்சையை மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் வலிப்பு நோய் மருத்துவர் டாக்டர்.S.முத்துக்கனி , நரம்பியல் மருத்துவர்கள்  டாக்டர்.S.மீனாட்சி சுந்தரம், டாக்டர்.S.N.கார்த்திக், டாக்டர்.P.சுரேஷ் , நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் டாக்டர்.S.சுந்தரராஜன், டாக்டர்.D.ஷியாம், டாக்டர். கெவின் ஜோசப், நரம்பு மயக்கவியல் மருத்துவர் டாக்டர்.நிஷா மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் டாக்டர். பத்மபிரகாஷ்  ஆகியோர் ஓர்  குழுவாக இணைந்து இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக  செய்துமுடித்தனர்.


 
இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தைகள் இருவரும் நலமுடனும்  தன்னம்பிக்கையுடனும் இருக்கிறார்கள். 24 நேர தீவிர கண்காணிப்புக்கு பிறகு அவர்கள் எந்த சிரமமின்றி இயல்பு நிலை திரும்பியுள்ளார்கள். இந்த அறுவை சிகிச்சை அவர்களுக்கு  ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும் இது அவர்களது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுத்துள்ளது. தென்தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.  இனி தீராத வலிப்பு நோய்களுக்கு உயரிய மருத்துவமனைகளைத் தேடி சென்னை வரை செல்ல வேண்டியதில்லை. மதுரை அப்போலோ மருத்துவமனையிலேயே அனைத்து வசதிகளுடன் குறைந்த செலவில் வலிப்பு நோய்க்கு சிகிச்சையை மேற்கொள்ளலாம்.     


Popular posts
கொரானா ஊரடங்கால் ஹோட்டல் செல்ல முடியவில்லை என்ற கவலையை போக்கிடும் சாய் ஹோம் புட் அண்ட் கேட்டரர்ஸ்
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image
ஃப்ளேம்  பல்கலைக்கழகம் நடத்திய உயர் தாக்க தொழில்முனைவோர் மற்றும் புதுமை  மாநாடு
Image
அலங்காநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள் - பிடித்து வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை
Image
மதுரை மத்திய தொகுதி  பகுதியில்  32வது போர்வெல் : சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
Image