கிராம சபை கூட்டங்கள் நடத்த தடை.... அதிமுக அரசின் அதிகார அத்துமீறலை உடைத்து மக்களை சந்தித்த திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள்

 

 


 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திரண்டு நிற்கிறார்கள் ஊராட்சித் தலைவர்கள் என்ற அச்சத்தால் கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்திருக்கிறது தமிழக அரசு; திட்டமிட்டபடி தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர்கள் மக்களைச் சந்திப்பார்கள். வேளாண் சட்டங்களின் தீமைகளை எடுத்துரைப்பார்கள்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

 

இதன்படி மதுரை மாவட்டம் செல்லம்பட்டி பகுதியில்  மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக மக்களை சந்தித்து விளக்கினர் .இதில் மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் ,மாவட்ட ஊராட்சி துணை தலைவர் செல்லம்பட்டி முத்துராமன் ,திமுக ஒன்றிய செயலாளர் சுதாகரன், கோவிலாங் குளம் ஊராட்சி தலைவர் ஜெயந்தி முத்துராமன் ,மாவட்ட துணை செயலாளர் சிவனாண்டி ,முல்லை மூவேந் திரன் பலர் கலந்து கொண்டனர் .

 

 


பொதுமக்களை சந்தித்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தின் தீமைகள் குறித்து விளக்கினர்.இந்நிலையில் இந்த சந்திப்பின் போது அனுமதியின்றி மக்களை சந்திக்க கூடாது என காவல் துறையினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் மத்தியில் பேசியதோடு ,கிராம சபை கூட்டத்திற்கு தடை உள்ள நிலையில் கூட்டம் எப்படி நடத்தலாம் என  கூறினர்.நாங்கள் கிராம சபை கூட்டம் நடத்த வில்லை மக்களை சந்திக்கிறோம் என திமுக உள்ளாட்சி பிரதிகள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது .

 


இதேபோல திமுக தலைவர் முக ஸ்டாலின் உத்தரவுப்படி மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டத்தின் தீமைகள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கிராம மக்களை சந்தித்து விளக்கிடும் நிகழ்வு கருமாத்தூர்  ஊராட்சியில் கோட்டை மந்தை கோவில் வளாகத்தில்  நடைபெற்றது.இந்நிகழ்வில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், ஒன்றிய செயலாளர் சுதாகரன் ஒன்றிய கவுன்சிலர் குட்டி, இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்