மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 26.50 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேன் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி

 



மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக 79 திட்டப்பணிகளை நிறைவேற்றியுள்ளார் அடுத்த கட்ட திட்ட பணிகள் ஆக மதுரையில்  வார்டு 80 முத்து மீனாட்சி மருத்துவமனை வார்டு 13 புட்டுத்தோப்பு வார்டு 9 அருள்தாஸ்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 26. 50 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகள் கொண்ட டாப்ளர் ஸ்கேன் கருவிகள் அளித்துள்ளார் இதன்மூலம் கர்ப்பிணி பெண்கள் பெருமளவு பயன்படும் வகையில் வயிற்றில் உள்ள குழந்தையின் உயரம் எடை ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். மேலும் குழந்தை உருவாக்கத்தின் நிலைகளைத் தெரிந்து கொள்ளலாம்.


லீனியர் கருவிகள் மூலமாக மார்பகம் தைராய்டு ரத்தநாளம் குறித்த பிரச்சினைகளை அறிந்து கொள்ள முடியும் மதுரை மாநகராட்சியில் முதல்முறையாக இந்தத் திட்டப் பணிகள் மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.



பின்பு செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் பிடிஆர் தியாகராஜன்


1920 ஆம் ஆண்டு முதல் அனைவரும் மருத்துவம் படிக்கலாம் என்ற உரிமையை பெற்று தந்ததில் தொடங்கி அனைத்து கட்சிகளின் ஈடுபாட்டால் தமிழகத்தில் குக் கிராமம் வரை வளர்ச்சி பெற்று தனித்த அடையாளமாக தமிழகம் திகழ்கிறது.இதற்காக தான் நீட் போன்ற தேர்வுகளை எதிர்த்து வருகிறோம்.முதன்மை சுகாதார நிலையங்கள் ,ஆரம்ப சுகாதார நிலையங்கள் இவற்றில் மருத்துவமும் ,ஆராச்சியும் நடைபெற வேண்டும் என்பது தான் இலக்கு.நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற போது இந்த ஸ்கேன் மையம் பயன்பாடு இன்றி மூடப்பட்டு இருந்தது.எங்கள் கட்சி நிர்வாகிகள் பலர் இதனை சீர் படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தனர்.அதன் பிறகு பல ஆணையாளர்கள் பொறுப்பேற்ற பிறகு பழைய இயந்திரத்துடன் செயல்பட்டு வந்தது.தொகுதி மேம்பாட்டு நிதியில் மதுரை மாநகராட்சியில் முதல் முறையாக இந்த ஸ்கேன் இயந்திரம்  வைக்கப்பட்டுள்ளது.இந்த இயந்திரம் வைக்கப்பட்ட இன்றே 30 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் எடுக்க வந்துள்ளனர்.இங்கு இருக்கும் தேவைகளை பொறுத்து ஒருநாள் முழுமைக்கும் இருந்து மருத்துவர்கள் செயலாற்ற வேண்டிய தேவைகள் இருக்கிறது .அதனை முன்னின்று  நகர் நல அலுவலர் இதனை இன்னும் சிறப்பாக செயல்படுத்துவார் என நம்புகிறேன்.இந்த அளவிற்கு முன்னேற்றமடைந்த தொழில்நுட்பம் கொண்ட ஸ்கேன் இயந்திரத்தை பயன்படுத்தி கொள்வதன் மூலம் நன்றாக ஆராய்ந்து பிறப்பின் போது ஏற்படும் குழந்தை இறப்பு போன்றவற்றை தடுக்க முடியும் . பிரசவம் எளிதாக நடைபெற வழிவகுக்கும் இதனை தொகுதி மக்கள்  பயன்பெறும் வகையில் திறந்து வைத்து இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


நீட் தேர்வில் வெற்றி பெற்ற தேனியைச் சேர்ந்த ஜிவித்குமார் தமிழ்வழி அரசு பள்ளியில் படித்து இருந்தாலும் கூட கடந்த முறை அவர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றும் கூட நீட் தேர்வில் வெறும் 193 மதிப்பெண்களை பெற முடிந்தது .பின்னர் அனிதா மரணத்திற்கு பிறகு அதற்காக நியாயம் கேட்டு அரசுப்பணியை கைவிட்ட சபரி மாலா போன்றவர்கள் நிதி திரட்டி பயிற்சி மையங்களுக்கு அனுப்பி  அந்த மாணவருக்கு பயிற்சி கொடுத்த பிறகு இந்த நிலையை அடைய முடிந்துள்ளது.


பள்ளிப்படிப்பில் மதிப்பெண்ணை கருத்தில் கொள்ளாமல் இது போன்ற தேர்வை மட்டும் மருத்துவ படிப்பிற்கு தகுதியாக கொள்வது ஏற்புடையது அல்ல.உலகம் முழுவதும் இது போன்று வேறு எங்கும் இது போன்ற நடைமுறை அல்ல. முழுவதுமாக  தமிழகத்தின் நிதியின் மூலம் நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளில், மருத்துவ படிப்பில் கை வைத்திட மத்திய அரசிற்கு என்ன அதிகாரம் இருக்கிறது. தேசிய அளவில் தமிழகம் அடைந்த இந்த இடத்தை பாதி கூட மற்ற மாநிலங்கள் அடையவில்லை .தமிழக கல்விக் கொள்கையின் மீது கை வைக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது நீட்தேர்வு போன்ற பல்வேறு விவகாரங்களில் நீதிமன்றம் உறங்குகிறதா எனவும் கேள்வி எழுப்பினார். இது போன்ற தேர்வுகளை திணிப்பது கூட்டாட்சிக்கும் ,சட்டமைப்பிற்கும் விரோதம் என்றார்.


Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :