ஈரோடு மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2020 சிறப்பு தள்ளுபடி விற்பனைக்கு ரூ.2.70 கோடி இலக்கு: ஆட்சியர் கதிரவன் தகவல்


ஈரோடு வசந்தம் விற்பனை நிலையத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவர்  கதிரவன் தீபாவளி 2020 சிறப்புத் தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 85 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக நெசவாளர்கள் உற்பத்தி  செய்யும் இரகங் களை  கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக  சந்தைப்படுத்தி  நெசவாளர்களுக்கு  பேருதவி  புரிந்து  வருகிறது.   கோ-ஆப்டெக்ஸ்  நிறுவனம் பட்டு  இரக உற்பத்தியில்  பாரம்பரியமாக  ஈடுபட்டு வருகிறது. காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சை போன்ற  பகுதிகளில்  உற்பத்தி  செய்யப்படும் பட்டுச் சேலைகள் வாடிக்கையாளர் களின் பெரும் வரவேற்பை பெற்றுத் திகழ்கின்றன. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ற புதிய  வடிவமைப்பான மென்பட்டு சேலைகளையும் கோ-ஆப்டெக்ஸ் அறிமுகப்படு த்தி  வருகின்றது.தீபாவளி 2020 சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக  கைத்தறி இரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 15.09.2020 முதல் 30 சதவீதம் அரசு சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறது.தீபாவளி 2020 சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய தூயபட்டு சேலைகள் மென்பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள். உயர் இரக பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு இரகங்கள், ஆடவர் அணியும் ஆயத்த சட்டைகள், லினன்  சட்டைகள், மகளிர் விரும்பும் சுடிதார் இரகங்கள், ஆர்கானிக் பருத்தி சேலைகள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.மேலும் ஏற்றுமதி இரகங்களான  படுக்கை விரிப்புகள், ஹோம் ஃபர்னிசிங்  இரகங்கள் மற்றும்  குவில்ட்  இரகங்களும் ஏற்றுமதி தரத்தில் அழகிய வடிவமைப்புகளில் விற்பனை க்கு  வைக்கப்பட்டுள்ளன.ஈரோடு மற்றும் கோபி செட்டிபாளையம் வசந்தம் விற்பனை நிலையங்கள் மூலம் கடந்த ஆண்டு 2019 தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையில் ரூ.2.29 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு தீபாவளி 2020-க்கு ரூ.2.70 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவன த்தின் ஆடைகளை வாங்கி நெசவாளர்களின் வாழ்வா தாரத்தை மேம்பட உதவிட வேண்டும் என தெரிவித்தார்.  இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக குழு இயக்குநர்   ரமேஷ், மண்டல மேலாளர்  அருள்ராஜன் மேலாளர் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி)  நந்த கோபால், மேலாளர் (அரசுத்திட்டம்)  சாந்தாராம், மேலாளர் (ஆயத்த ஆடை) பழனிசாமி, ஈரோடு வசந்தம் விற்பனை நிலைய மேலாளர் (பொ)  விமல்ராஜ் உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Popular posts
புரோஸ்டேட் புற்றுநோயைப் பற்றி மருத்துவர்களின் அறிவுரை
கொரோனாவால்  சரிந்துள்ள  பொருளாதாரத்தை மீட்கவும், மத்திய மாநில அரசுகள் நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை  செயல்படுத்த விரைந்து  நடவடிக்கை  எடுக்க பொறியாளர் ஏசி காமராஜ் வலியுறுத்தல் 
Image
பாஜக சார்பில் எலத்தூர் பேரூராட்சி பகுதிகளில் ஆயுஷ்மான் பாரத் வழங்கல்
Image
ஓரியண்ட் எலெக்ட்ரிக் அறிமுகப்படுத்தும் இன்வெர்டர் ஐ-வரிசை மின்விசிறி
Image
செல்லம்பட்டி ஒன்றியத்தில் கழகத் தலைவரின் விழியசைவில் வெற்றிகரமாக நடைபெறும்  இணைய  வழி உறுப்பினர் சேர்க்கை : கிராமம் கிராமமாக ஆர்வத்துடன் திமுகவில் உறுப்பினராகும் பொதுமக்கள் 
Image