கொடிமங்கலம் நாகதீர்த்தம் வைகை ஆற்று பகுதியில் ரூ.17.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணி : கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு

 மதுரை கொடிமங்கலம் நாகதீர்த்தம் வைகை ஆற்று பகுதியில் ரூ.17.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் .டி.ஜி.வினய்,தலைமையில், ஆணையாளர் .விசாகன்,  முன்னிலையில்   கூட்டுறவுத் துறை அமைச்சர் .செல்லூர் கே.ராஜூ ஆய்வு மேற்கொண்டு பேசும்போது தெரிவித்ததாவது: 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 19.09.2020 அன்று காணொலி காட்சி மூலம் மாடக்குளம் கண்மாய்ககு தண்ணீர் கொண்டு செல்வதற்கு கொடிமங்கலம் அருகில் உள்ள வைகை ஆற்று பகுதியில் ரூ.17.40 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த தடுப்பணையின் மூலமாக 215.89 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த தடுப்பணை கட்டுவதால் மாடக்குளம் கண்மாய், கீழமாத்தூர் கண்மாய் மற்றும் துவரிமான் கண்மாய் ஆகிய 3 கண்மாய்கள் மூலம் 3360 ஏக்கர் நிலங்கள் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும். இது தவிர மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாடக்குளம், அச்சம்பத்து, பொன்மேனி, பழங்காநத்தம், எல்லீஸ் நகர், டி.வி.எஸ்.நகர் மற்றும் எஸ்.எஸ்.காலனி ஆகிய பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் உயருவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மதுரையின் தென்பகுதி முழுவதும் குடிநீர் பிரச்சனை என்பது இல்லாத அளவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொண்டு இந்த தடுப்பணை திட்டத்தின் மூலம் பயன் அடைவார்கள். இந்த தடுப்பணை 210 மீட்டர் நீளம், 2.10 மீட்டர் உயரம் கொண்டு அமைக்கப்பட உள்ளது. தண்ணீர் வரும்போது இந்த தடுப்பணையில் வினாடிக்கு 6700 கனஅடி தண்ணீர் சேமிக்கப்பட்டு கண்மாய்களுக்கு தண்ணீர் சென்றுவிடும். இந்த பகுதி விவசாயிகளின் 40 ஆண்டு கால கனவுகள் இன்றைக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையின் மூலம் மொத்த வெளியேற்றம் தண்ணீரின் திறன் வினாடிக்கு 80150 கனஅடி ஆகும். மாண்புமிகு அம்மா அவர்கள் அறிவித்த இந்த குடிமராமத்து திட்டத்தின் மூலமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2016-2017 முதல் 2020-2021 வரை 1428.95 கோடி மதிப்பீட்டில் 6,246 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு குடிமராமத்து பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் மதுரை மாவட்டத்திற்கு 56 பணிகளுக்கு ரூ.31 கோடி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கீடு செய்து உள்ளார்கள். மாடக்குளம் கண்மாயில் நீர் கொள்ளளவு சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கண்மாய் இரண்டு ஆண்டுகளாக கரைகள் வலுபடுத்தப்பட்டும், நீர் வரத்து வரும் கால்வாய்கள் தூhர்வாரப்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள துவரிமான் கண்மாய் உள்ளிட்ட சிறு கண்மாய்களும் வலுப்படுத்தப்பட்டு தூhர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த பகுதிகளுக்கு அடுத்த 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பரவை பகுதியில் உள்ள விவசாய பெருமக்கள் பாசன வசதிக்காகவும், குடிநீர் கிடைப்பதற்காகவும் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு பூர்வாங்க பணிகளாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னோடியாக இந்த கண்மாய் ரூ.90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூhர்வாரப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆரப்பாளையம் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக ரூ.12 கோடி மதிப்பீட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திட்டம் அறிவிக்கப்பட்டு விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளது. 

 

மதுரை மக்களின் கோரிக்கையான தங்குதடையின்றி குடிநீர் கிடைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவித்த முல்லை பெரியாறு அணையிலிருந்து குடிநீர் கொண்டு வருவதற்காக பணிகள் விரைவில் நிறைவேறி மதுரை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கொண்டு வருவதற்கு வழிவகைகளை மாண்புமிகு அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி    48 ஆண்டுகள் கழித்து மேட்டுர் அணை தூhர்வாரப்பட்டு உள்ளது. அதேபோன்று வைகை அணையை தூர்வாரும் பணியும் கடந்த ஆண்டே மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும் கடந்த ஆண்டு அதிக மழை பெய்து வைகை அணையில் தொடர்ந்து தண்ணீர்; இருப்பதால் வைகை அணையின் தூhர்வாரும் பணியில் காலதாமதம் ஏற்படுகிறது. மாடக்குளம் கண்மாயில் ஏற்கனவே செல்கின்ற தண்ணீர் தொடர்ந்து செல்லும் தடுப்பணை கட்டுவதன் மூலம் மேலும் கூடுதலாக தண்ணீர் கிடைக்கும். அருகில் உள்ள தென்கால் கண்மாய், நிலையூர் கண்மாய் வரைக்கும் உபரி தண்ணீர் செல்லும் அளவிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் எப்போது எல்லாம் தண்ணீர் வருகிறதோ அப்போது எல்லாம் இந்த தடுப்பணையின் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அந்த பகுதி செழிப்பாகவும், குடிநீர்; பிரச்சனை இல்லாத நிலை உருவாக்கப்படும்.  

 

மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் ஜப்பான் நாட்டு நிதியுதவி கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும். மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டப்படும் பேருந்து நிறுத்துமிடம் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்படும். இதர கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்றார். 

 

பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சுகுமாரன், நகரப் பொறியாளர் அரசு, செயற்பொறியாளர் மாயகிருஷ்ணன்,   உதவி பொறியாளர்கள் சுந்தரமூர்த்தி, மோகன் குமார், கருத்தக்கண்ணன் ,அலெக்சாண்டர்,மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ். பாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி செயற்பொறியாளர்கள் கருத்தப்பாண்டியன், அலெக்ஸ்சாண்டர் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Popular posts
கொரானா ஊரடங்கால் ஹோட்டல் செல்ல முடியவில்லை என்ற கவலையை போக்கிடும் சாய் ஹோம் புட் அண்ட் கேட்டரர்ஸ்
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image
ஃப்ளேம்  பல்கலைக்கழகம் நடத்திய உயர் தாக்க தொழில்முனைவோர் மற்றும் புதுமை  மாநாடு
Image
அலங்காநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள் - பிடித்து வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை
Image
மதுரை மத்திய தொகுதி  பகுதியில்  32வது போர்வெல் : சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
Image