அக்.10ம்தேதி டிஜிட்-ஆல் சங்கமம் மெய்நிகர் உச்சி மாநாடு

 



தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸின் ஒரு அங்கமான டிஜிட்-ஆல் அமைப்பின் தகவல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த  உலகளாவிய மெய்நிகர் உச்சி மாநாடு ”டிஜிட்-ஆல் சங்கமம் 2020 அக்டோபர் 10ம்தேதி  ஆன்லைன் மூலம் நடக்கிறது. இந்திய முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களால் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம்தேதி தொடங்கப்பட்ட டிஜிட்-ஆல் அமைப்பு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஒரு அங்கமாகும். இந்த அமைப்பு சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக சங்கமம் என்ற பெயரில் பிரமாண்ட ஒரு நாள் உச்சி மாநாடு நடத்தப்பட்டது.


இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த மாநாடு ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.  இதில் அமெரிக்கா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த  18க்கும் மேற்பட்ட புதுயுக தமிழ் தொழில்முனைவோர்கள் பேசுகிறார்கள். இலவச அனுமதியோடு நடைபெறும்  இந்த மாநாட்டில் 1000க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.


இந்த மாநாடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இதில் டிஜிட்-ஆல் அமைப்பின் தலைவர் ஜே.கே.முத்து, சங்கமம் 2020 ஒருங்கிணைப்பாளார் எம்.சாஹித் அலி, துணைத்தலைவர்கள் சரவணன் ராம்தாஸ், வி.மதன் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் சங்கமம் 2020 பற்றி பேசினார்கள். அப்போது,


கொரோனா காலத்தில் எல்லாமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. நாடு பெரிய டிஜிட்டல் புரட்சியை எதிர்கொள்ளப் போகிறது. நம்முடைய மக்களும் டிஜிட்டல் அறிவைப் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சிறிய தொழில் நிறுவனங்கள் முதல் பெரிய பெரிய தொழிற்சாலைகள் வரை அனைவருமே டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். டிஜிட் ஆல் அமைப்பு கடந்த 2 ஆண்டுகளாக சங்கமம் என்ற உச்சி மாநாட்டை மதுரையில் நடத்தியது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


இந்த ஆண்டு கொரோனா காரணமாக மெய்நிகர் உச்சி மாநாடாக ஆன்லைன் மூலம் சங்கமம் 2020 நடைபெறவிருக்கிறது.  அக்டோபர் 10ம்தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மாநாடு நடக்க உள்ளது. முழுக்க முழுக்க தமிழில் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 18க்கும் மேற்பட்ட தமிழ் தொழில்முனைவோர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.  சைபர் பாதுகாப்பு, இளம் தொழில்முனைவோருக்கான வெற்றிக் கதைகள், புதிய டிஜிட்டல் உலகுக்கு தயாராகுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிறப்பு விருந்தினர்கள் பேசவுள்ளனர். தொழில்முனைவோர், மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் தகவல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு இந்த மாநாடு வழிவகை செய்யும், என்றனர்.


Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :