எலெக்ட்ரிக் மற்றும் ஆட்டோமேஷன் வணிகத்தை ஸ்நைடரிடம் ஒப்படைத்த லார்சன் டூப்ரோ
இந்தியாவின் முன்னணி பொறியியல், தொழில்நுட்பம், கட்டுமானம் மற்றும் நிதிச் சேவை நிறுவனமான லார்சன் & டூப்ரோ (எல் அண்ட் டி), தனது மின் மற்றும் தானியங்கி எந்திரமயமாக்கல் ((Electrical & Automation - L&T E&A)துணை வணிகத்தை,செயல்பாட்டு யுக்தி ரீதியாக எரிசக்தி மேலாண்மை மற்றும் ஆட்டோமேஷனில் உலகளாவிய நிறுவனமாக விளங்கும் ஸ்நைடர் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளது.
லார்சன் & டூப்ரோவின் குழுத் தலைவர் ஏ.எம். நாயக் இந்த செயல்பாட்டு யுக்தி நடவடிக்கை பற்றி கருத்துத் தெரிவிக்கையில்: “எலெக்ட்ரிக் & ஆட்டோமேஷன் வணிகத்தை விட்டு விலகுவது என்பது தற்போதைய நடவடிக்கையால் நிறைவடைந்திருப்பது எங்கள் நீண்டகால யுக்தியில் ஒரு முக்கிய மைல் கல்லாகும். எல் & டி பல ஆண்டுகளாக வளர்த்து வந்த தொழில் பிரிவை மேலும் வளர்ப்பதற்கான சரியான நிறுவனமாக ஸ்நைடர் எலக்ட்ரிக் திகழும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.லார்சன் & டூப்ரோவின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ். என். சுப்ரமண்யன் கூறுகையில், "இந்த ஒப்பந்தம் மிகவும் வலுவான,நீண்டகால செயல்பாட்டு யுக்திகளை உருவாக்க எங்களுக்கு உதவும். இதன் மூலம் வணிகத்தின் முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துவதன் வாயிலாக எங்கள் பங்குதாரர்களுக்கு நீண்டகால மதிப்பு வாய்ப்புகளை உருவாக்க இயலும். ” என்றார்.
அண்மைக் காலங்களில் மிகவும் சிக்கலான வணிகமாக உள்ள எல்& டி நிறுவனத்தின் இ & ஏ பிரிவின், குறைந்த மற்றும் நடுத்தர மின்னழுத்த சுவிட்ச் கியர், மின் அமைப்புகள், தொழில்துறை மற்றும் கட்டிட ஆட்டோமேஷன் தீர்வுகள், எரிசக்தி மேலாண்மை அமைப்புகள், அளவீட்டு தீர்வுகள் மற்றும் திட்டங்கள் மற்றும் சேவைகள் வணிகம் தொடர்பானவை ஸ்நைடர் எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு மாற்றப்படுகிறது. எல் & டி இ & ஏ பிரிவில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஊழியர்கள் இனி ஸ்நைடர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் உலகளாவிய குடும்பத்தின் ஒரு பகுதியாக மாறுவார்கள். தற்போது ஸ்நைடர் எலக்ட்ரிக் உடனான இந்த ஒப்பந்தம் எல் & டி நிறுவனத்தின் செயல்பாடுகளை மேலும் பலப்படுத்தும்.