” மதுரைக்கு ”க்ரீனர் லைஃப் ஸ்டைலை” அறிமுகப்படுத்திய சிகே மோட்டார்ஸ்

 இரு சக்கர மின்சார வாகன பிரிவில் மிக வேகமாக வளர்ந்துவரும் நிறுவனமான சிகே மோட்டார்ஸ் மதுரையில்  தனது தடத்தினை பதிக்கிறது. மதுரைக்கான அதன் அதன் அங்கீகாரம் பெற்ற டீலராக பை கார்பன் மோட்டார்ஸ்   ஐ நியமித்துள்ளது. 1500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய ஷோரூம் முழு வரம்பிலான சிகே மோட்டார்ஸ்ஸின் மின் சார வானங்களை காட்சிப்படுத்தும். இந்த புதிய ஷோரூமில் அனைத்து சிகே மோட்டார்ஸ் வாகனங்களும் விற்பனைக்கு கிடைக்கும்.மேலும் அனைத்து வாகனங்களுக்கான டெஸ்ட் ட்ரைவ் இந்த ஷோரூமில் கிடைக்கிறது.


இந்த டிலர்ஷிப் துவக்க விழாவில் பேசிய சிகே மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிறுவுணர் & தலைவர் ரு சந்திர சேகர், “ நாங்கள் அறிமுகம் செய்துள்ள இந்த இரு சக்கர மின்சார வாகனங்கள் சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, சிறந்த தரம் மற்றும் பயனர் நட்பான லித்தியம்-அயான் பேட்டரி மூலம் இயக்கப்படுகின்றன.மாசில்லா மதுரையை உருவாக்க விரும்பும் மதுரை மக்கள் எங்கள் வாகனத்தை மிகவும் விரும்புவார்கள்.” என கூறினார். இந்த நிகழ்வில் பேசிய பை கார்பன் மோட்டார்ஸ்   உரிமையாளர்  ஷைபியுல்லாஹ் அஹமது, “சுற்று சூழல் நட்பு கொண்ட பயனர்களுக்கு குறைந்த எரிபொருள் செலவை வழங்கும் CK மோட்டார்ஸ் இரு சக்கர வாகனங்களின் டீலராக இணைவதில் பெருமை கொள்கிறோம். மதுரை மக்கள் இந்த புதிய ஷோரூமை மிகவும் விரும்புவார்கள் என எதிர்பார்க்கிறோம்.” என கூறினார்.


இந்த டீலர்ஷிப் #59, தரை தளம், சிவபாக்ய வணிகவளாகம், விலாங்குடி, பாரதியார் தெரு, மதுரை - 625018 என்ற முகவரியில் அமைந்துள்ளது. இந்த அனைத்து வாகனங்களும் மதுரையில்  அமைந்துள்ள பை கார்பன் மோட்டார்ஸ்ஸில் வாங்குவதற்க்கும் டெஸ்ட் ட்ரைவ் செய்வதற்க்கும் கிடைக்கும். வாகனங்களை முன் பதிவு செய்யவும், டெஸ்ட் ட்ரைவ்க்கு முன் பதிவு செய்யவும் +91 9500966551 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.


Popular posts
கொரோனாவால்  சரிந்துள்ள  பொருளாதாரத்தை மீட்கவும், மத்திய மாநில அரசுகள் நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை  செயல்படுத்த விரைந்து  நடவடிக்கை  எடுக்க பொறியாளர் ஏசி காமராஜ் வலியுறுத்தல் 
Image
அலங்காநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள் - பிடித்து வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை
Image
ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் மற்றும் வி. சுக்ரா மனநல ஆலோசனை மையம் ஆகியோர் ஒன்றிணைந்து தற்கொலையை தடுக்கும் பணி
Image
ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image