பிரதமர் மோடி பிறந்தநாள் : மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ஓம் ஸ்ரீ முருகன் தலைமையில் எழுச்சி கொண்டாட்டம் 

 

 


இந்திய தேசத்தின் இரும்பு மனிதர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 70 வது பிறந்த நாள் விழா மதுரை செக்கானூரணி பகுதியில் புறநகர் மாவட்ட செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான ஓம் ஸ்ரீ முருகன் தலைமையில் எழுச்சியோடு கொண்டாடப்பட்டது .பிறந்த நாள் நிகழ்வாக செல்வ விநாயகர் திருக்கோயில் வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

 

 


 

பின்னர் பாரத் மாதா கீ ஜே முழக்கம் விண்ணை பிளக்க பாஜக கொடியினை ஓம் ஸ்ரீ முருகன் ஏற்றி வைத்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தவசி,வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட பொதுச் செயலாளர் சுந்தர பாண்டியன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் கார்மேகம், இளைஞரணி ஒன்றிய தலைவர் பிரேம் குமார், விவசாய அணி மாவட்ட செயலாளர் மூவேந்திரன், ஊரக வளர்ச்சி துறை மாவட்ட செயலாளர் நாராயணன், பால்ராஜ், அலங்காரம் பூசாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.