மாசி வீதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததால் சிரமங்கள் : மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு


 


மதுரை மாநகரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.


மாசி வீதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததால்  வணிகர்களும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.


 



மேலமாசி வீதி மக்கான் தோப்பு பகுதியில் இப்பணிகளை ஆய்வு செய்த மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ,ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதால் மதுரை மத்தியை தொகுதியை சார்ந்த பொதுமக்களும் ,வணிகர்களும் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.


குறிப்பாக பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததாலும்,இணைப்பு பணிகள் விரைந்து நடைபெறாததாலும் மாசி வீதிகளில் வாகனம் சென்று வர இயலவில்லை.


மழைக்காலத்தில் விபத்து ஏற்படும் சூழ்நிலை இருக்கிறது.


எனவே மாசி வீதிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்திட மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.


இதே போல் வார்டு 80 ல் சம்பந்த மூர்த்தி தெரு பகுதியில் சேதமடைந்த சாலையால் அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று சாலையை சீரமைத்திட நடவடிக்கை எடுத்துள்ளதோடு அப்பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.


Popular posts from this blog

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்