ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் மற்றும் வி. சுக்ரா மனநல ஆலோசனை மையம் ஆகியோர் ஒன்றிணைந்து தற்கொலையை தடுக்கும் பணி

  


நாம் இவ்வுலகில் வாழ்வதற்கே பிறந்திருக்கிறோம், வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்பதை உணரவேண்டும்.


 


தற்கொலை என்பது இன்றைய காலங்களில் பிரச்சனையை எதிர்கொள்ள முடியாத துணிவற்ற மனநிலையும் மற்றும் பிரச்சனையை கையாளக்கூடிய திறனற்ற மனநிலையும் இருக்கின்ற காரணத்தினால் பல்வேறு பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவினை ஒவ்வொரு வருடமும் சுமார் 10 லட்சம் பேர் எடுக்கிறார்கள்.


 


தற்கொலை செய்ய நினைக்கும் பலர் இறப்பதை தவிர வேறுவழியே இல்லை என்ற  முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.  அந்த ஒரு கணத்தில் மரணம் மட்டுமே தீர்வாக அவர்களுக்கு தெரிகிறது. சமீப காலமாக தற்கொலை என்ற சம்பவம் அதிகமாக அரங்கேறி வருகிறது.


 


தற்கொலை என்பதை தடுக்கும் வகையிலும் அதை குறைக்கும் முறையிலும் மேலும் முழுமையான தீர்வை உருவாக்கவேண்டும் என்ற மக்கள் நலன் காக்கும் சமூக சிந்தனையோடும்   செயல்பட  ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஈரோடு மாவட்ட காவல் துறை,  ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் மற்றும் வி. சுக்ரா மனநல ஆலோசனை மையம் ஆகியோர் ஒன்றிணைந்து இப்பணியை செயல்படுத்த முடிவுசெய்துள்ளார்கள் . இதற்காக தற்கொலை தடுப்பு ஆலோசனை மையத்தை தோற்றுவித்துள்ளார்கள்.


 


இதன் அறிமுக விழா 10.09.2020 அன்று  வியாழக்கிழமை காலை 9.45 மணிக்கு எடிஆர் பில்டிங் , ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. உலக தற்கொலை தடுப்பு நாளன செப்டம்பர் 10 அன்றே செயலாக்கத்திற்கு கொண்டு வந்து தன்னம்பிக்கைக்கான ஆலோசைனை கூறும் இலவச தொலைபேசி எண் +91 9095500955 மற்றும் அதன்  விழிப்புணர்வு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது. மற்றும்  அறிமுகம் செய்துவைத்தார்கள் .


 


இந்த விழாவில் வி. சுக்ரா அறக்கட்டளை தலைவர் திரு. Dr. E.M. அசோக் அவர்கள் வரவேற்புரையாற்றினார், ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் நலவாழ்வு குழு தலைவர் Dr. K.M. அபுல்ஹசன் திட்ட விளக்கவுரையாற்றினார், ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் தலைவர், M. சின்னசாமி  தலைமையுரையாற்றினார். மேலும் ஈரோடு மாவட்ட, மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவர் / முதன்மை நீதிபதி தீப்தி அறிவுநீதி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் A. கனகேஸ்வரி மற்றும் ஈரோடு நலப்பணிகள் இணை இயக்குனர் Dr. D. கோமதி, ஆகியோர் தன்னம்பிக்கைக்கான ஆலோசைனை கூறும் இலவச தொலைபேசி எண்  மற்றும் அதன்  விழிப்புணர்வு பிரசுரங்களை வெளியிட்டார்கள்.


 


கடைசியாக,  ஈரோடு மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலர் /  சார்பு நீதிபதி S. இலட்சுமி  நன்றியுரையாற்றினார்கள்.


 


மாவட்ட ஆட்சித் தலைவர் சி. கதிரவன்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P. தங்கதுரை மற்றும் ஈரோடு மாவட்ட மனநல மருத்துவ அலுவலர் Dr. V. ஆனந்தகுமார் ஆகியோர் வாழ்த்து  தெரிவித்தார்கள்.


Popular posts
கொரோனாவால்  சரிந்துள்ள  பொருளாதாரத்தை மீட்கவும், மத்திய மாநில அரசுகள் நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை  செயல்படுத்த விரைந்து  நடவடிக்கை  எடுக்க பொறியாளர் ஏசி காமராஜ் வலியுறுத்தல் 
Image
அலங்காநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள் - பிடித்து வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை
Image
ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image