புரோஸ்டேட் புற்றுநோயைப் பற்றி மருத்துவர்களின் அறிவுரை

புரோஸ்டேட் நோய்கள் வயதாகும் ஆண்களிடையே பொதுவாக காணப்படுபவை ஆகும். இவை குறிப்பிடத்தக்க அளவு இறப்பை ஏற்படுத்துகின்றன. அவை பினைன் புரோஸ்டேடிக் ஹைபர்பிளாசியா (பிபிஎச்), புரோஸ்டேட் கேன்சர் மற்றும் புரோஸ்டேடிடிஸ் (புரோஸ்டேட் சுரப்பி அழற்சி அடைதல்) என்ற 3 பொதுவான வடிவங்களில் வெளிப்படுகின்றன. இவற்றில் பிபிஎச் மிகவும் பொதுவானதாகும். இது புற்றுநோய் இல்லாமல் புரோஸ்டேட் சுரப்பி பெரிதாகுதல் ஆகும். மிகவும் பொதுவாக வயதான மற்றும் வயோதிக ஆண்களிடையே காணப்படுகிறது.


 


புரோஸ்டேட் என்பது வாதுமைக் கொட்டை அளவிலான சுரப்பி ஆகும். இது ஒரு ஆணின் சிறுநீர்ப்பைக்கு கீழே அமைந்துள்ளது. பினைன் புரோஸ்டேடிக் ஹைபர்பிளாசியா (பிபிஎச்) மற்றும் புரோஸ்டேட் கேன்சர் ஆகிய இரண்டும் புரோஸ்டேட் சுரப்பியை பாதிக்கின்றன. பிபிச் மற்றும் புரோஸ்டேட் கேன்சர் ஆகிய இரண்டிலும் புரோஸ்டேட் சுரப்பி பெரிதாகிறது. பிபிஎச் என்பது செயல்படாதது. அதாவது இது புற்றுநோய் அல்ல. இது பரவாது. ஆனால் புரோஸ்டேட் கேன்சர் உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுகிறது.


 


டாக்டர் பீட்டர் ஜோசப், யுரினாலஜிஸ்ட், மித்ரா ஹாஸ்பிடல் மதுரை கருத்தின்படி, “பிபிஎச் மற்றும் புரோஸ்டேட் கேன்சர் ஆகிய இரண்டும் ஒரே மாதிரியான அறிகுறிகளை ஏற்படுத்துவதால் பெரும்பாலும் இரண்டும் ஒன்றோ என்ற குழப்பம் ஏற்படுகிறது. எனவே, சிலநேரங்களில் இந்த இரண்டு நோய்களும் வெவ்வேறானவை என்று சொல்வது கடினமாகிறது. புரோஸ்டேட் பெரிதாகும்போது அது சிறுநீர்க் குழாயை அழுத்துகிறது. இந்த அழுத்தம் சிறுநீர் உடலிலிருந்து சிறுநீர்க் குழாயின் வழியாக வெளியேறுவதைத் தடுக்கிறது. புரோஸ்டேட் கேன்சரில் சிறுநீர்க் குழாயை அழுத்தப் போதுமானதாக புற்றுநோய் பெரிதாக வளரும் வரை அறிகுறிகள் வெளிப்படத் தொடங்குவதில்லை. “பிபிஎச்-ஐ (புற்றுநோய் அல்லாத நோய்) போலல்லாமல் புரோஸ்டேட் கேன்சர் புரோஸ்டேட் சுரப்பிக்கு தீங்கு விளைவிப்பதாக அல்லது புற்றுநோய் வளர்ச்சி கொண்டதாக அல்லது கட்டியை ஏற்படுத்துவதாக மற்றும் மிகவும் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்துவதாக உள்ளது. அடிப்படையில் பிபிஎச்-ஐ போலல்லாமல் இருப்பதால், இது புரோஸ்டேட் சுரப்பிக்கு வெளியே அருகேயுள்ள மற்றும் தொலைவில் உள்ள உறுப்புகளுக்கு பரவி சேதம் ஏற்படுத்துவதாக உள்ளது” என்றார்.


 


அண்மைக்கால குளோபல் கேன்சர் அப்சர்வேட்டரியின் (குளோபோகான்) கருத்தின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 25,000-க்கும் அதிகமான புதிதாக புரோஸ்டேட் கேன்சர் ஏற்பட்டு 17,000-க்கும் மேலானோர் இறக்கின்றனர் என்று மதிப்பிடுகிறது. பொதுவாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் மற்றும் பிபிஎச், எல்லா புற்றுநோய்களுடன் ஒப்பிடுகையில் புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் அரிதானது என்றாலும் இது இந்தியவின் முக்கிய நகரங்களில் ஆண்களுக்கு ஏற்படும் 2வது அல்லது 3வது மிகவும் பொதுவான புற்றுநோயாக உள்ளது. கடந்த பல பத்தாண்டுகளாக இந்தியாவில் புரோஸ்டேட் புற்றுநோய் பரவுவதில் பெரும் அதிகரிப்பு காணப்படுகிறது. இது வயதான ஆண்களின் அதிகரிப்பு, மேலை நாட்டினரின் வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல், நகர்மயமாதல், அதிகரிக்கும் பொது விழிப்புணர்வு காரணமாக அதிகரித்து வருகிறது. துல்லியமாக எது புரோஸ்டேட் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பது இன்னமும் தெளிவாகத் தெரியாவிட்டாலும், வயது அதிகரித்தல் (குறிப்பாக 50 வயதுக்கு அதிகமாக), நேர்மறையான புரோஸ்டேட் புற்றுநோய் (எ.கா. தந்தை, சகோதரர் அல்லது நெருக்கமான உறவினர் போன்றவர்கள்) குடும்ப வரலாறு ஆகியவை முக்கிய அபாய காரணிகளாக உள்ளன.


 


புரோஸ்டேட் புற்றுநோயை பின்வருமாறு வகைப்படுத்தலாம்: குறிப்பிட்ட இடத்திலானது (புற்றுநோய் மொத்தத்தில் புரோஸ்டேட் சுரப்பிக்குள்ளாக மட்டுமே உள்ளது), குறிப்பிட்ட இடத்தில் முற்றியுள்ளது (பெருங்குடல், சிறுநீர்ப்பை, அருகேயுள்ள தசைகள் மற்றும் நிணநீர் முடிச்சுகள் போன்ற புரோஸ்டேட் சுரப்பிக்கு அருகேயுள்ள உறுப்புகளுக்கு  மற்றும் பகுதிகளுக்கு புற்றுநோய் பரவியுள்ளது) மற்றும் பரவக் கூடியது (புற்றுநோய் தொலைவில் உள்ள இடங்களுக்கு பரவியுள்ளது). தொலைவில் உள்ள இடங்களுக்கு மத்தியில் இது எலும்புகளுக்குப் பரவும்தன்மை கொண்டதாக உள்ளது. குறிப்பாக எடையைத் தாங்கக் கூடிய கீழ்ப்புற முதுகு, இடுப்பு மற்றும் தொடைகளின் பெரிய எலும்புகளுக்குப் பரவக் கூடியது. புற்றுநோய்க் கட்டி இந்த இடங்களுக்குப் பரவுவது தண்டுவடத்தை முதுகெலும்புக்குள்ளாக அழுத்துவது (இடுப்புக்கு கீழே பக்க வாதத்தை ஏற்படுத்துவது), கடுமையான எலும்பு வலிகள் (முதுகு வலியை ஏற்படுத்துவது) மற்றும் எடை தாங்கும் எலும்புகளில் முறிவுகளைக் கூட ஏற்படுத்தலாம்.


 


உலக அளவில் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான சிகிச்சைகளாக மொத்தமாக புற்றுநோய் அணுக்களை (கதிர்வீச்சு மூலமாக) அழித்தல் அல்லது புற்றுநோய் கட்டியை அகற்றுதல் (அறுவைச் சிகிச்சை மூலமாக) - குணமாக்க முடிந்தால் (புற்றுநோய் உறுப்புக்குள்ளாக இருக்க வாய்ப்பிருந்தால்) அல்லது புற்றுநோய் வளர்ச்சியை மெதுவாக்குதல், பரவலின் சிக்கல்களை சமாளித்தல் மற்றும் குணமாக்க முடியாதபோது சாத்தியமாகும் வாழ்க்கைத் தரத்துடன் ஆயுளை நீட்டித்தல் (அதாவது அது உடல் முழுவதும் பரவிய பின்னர்).


 


இவ்வாறு, புரோஸ்டேட் புற்றுநோய் பல்வேறு வழிகளில் பிபிஎச்-ஐ விட மிகவும் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்துவதாக உள்ளது: செலவு அடிப்படையில், புரோஸ்டேட் புற்றுநோய்க்கு அதிக செலவு மிகுந்த அறுவைச் சிகிச்சை, கதிர்வீச்சு மற்றும் கீமோ-ஹார்மோனல் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. ஆனால் பிபிஎச்-க்கு சிக்கனமான மருந்துச் சிகிச்சைகள். இறப்பு அடிப்படையிலும், கடுமையான எலும்பு வலிகள், முறிவுகள், தீங்கு விளைவித்தல், மற்றும் குணப்படுத்த முடியாமல் போக வாய்ப்புள்ளதால் சிலசமயம் குணப்படுத்த முடியாத பக்க விளைவுகளுக்காக சிகிச்சை அளித்தல் மற்றும் இறப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.


 


எனவே, புரோஸ்டேட் புற்றுநோயை (குறிப்பிட்ட இடத்தில்) முன்னதான நிலையில் கண்டறிந்து உடனே தீவிர குணப்படுத்தும் சிகிச்சை அளிப்பது முக்கியமானது. புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் அதன் நிலையை நிச்சயமாகக் கண்டறிய யாப்ஸி தேவைப்படுவதால் இது செலவு மிகுந்த ஒன்றாக உள்ளது. இது புற்றுநோய் திசு இருப்பதை மைக்ரோஸ்கோப்பில் காட்டுகிறது மற்றும் பிஎஸ்எம்ஏ பெட் சிடி ஸ்கேன், மல்டிபாராமெட்ரிக் எம்ஆர்ஐ போன்றவற்றின் மூலம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இவையே நோய் உள்ள இடத்தை துல்லியமாக கண்டறிய மற்றும் நோய் பரவல்  அளவை அளவிட உதவுகின்றன.


 


எனவே, நோயாளி தொடக்கத்தில் தனது மருத்துவரின் மூலம் மலக்குடல் பரிசோதனையை செய்து கொள்வது மிகவும் முக்கியமானது. இது புரோஸ்டேட் சுரப்பியை மருத்துவர் கையுறை அணிந்து அதில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதா அல்லது கடின உணர்வைத் தருகிறதா என்று சோதிப்பதை உள்ளடக்கியது. பெரும் மக்கள் தொகையும் குறைந்த ஆதாரங்களுமே உள்ள வளர்ந்து வரும் நமது நாட்டில் மேலே குறிப்பிட்ட மிகவும் நவீன சோதனைகளைச் செய்வதற்கு முன்பாக சீரம் பிஎஸ்ஏ அளவுகளுடன் கூட்டாக இந்த எளிய சோதனையைச் செய்துகொள்வது சிக்கனமான சோதனை முறையாகும்.


Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :