உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்தில் சீரமைப்பு பணிகளை உடனே நடத்திட வலியுறுத்தி மனு

 உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்தில் சீரமைப்பு பணிகளை உடனே நடத்திட வலியுறுத்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் பி வி கதிரவன் மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் டி.ஜி வினய்யிடம் மனு அளித்தார் .


58 கிராம கால்வாய் திட்டத்திற்கு சிமெண்ட் வாய்க்கால்களை சீர் செய்து அமைக்கவும் அதற்கு உட்பட்ட 35 கண்மாய்களை குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வார வேண்டியும் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் சார்பில் இந்த மனு அளிக்கப்பட்டது .