ஸ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோவிலில் மூன்றாம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி சிறப்பு யாக பூஜை


ஈரோடு பட்டக்காரர் தோட்டம் பகுதியில்  அமைந்துள்ள ஸ்ரீ ராஜகணபதி ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஸ்ரீ கருப்பணசாமி ஸ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோவிலில் மூன்றாம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. நேற்று காலை 8.22 மணியளவில் ராகுபகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும்  கேது பகவான்  தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கும் பிரவேசிப்பதை  முன்னிட்டு ராகு கேது பெயர்ச்சி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.


இதில் நிர்வாக தலைவர் மோகன் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சி.கே.சரஸ்வதி, முன்னாள் கவுன்சிலர் கனகலட்சுமி மற்றும் ஏராளமான பக்தர்கள் யாக பூஜையில்  கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.