கொடிமங்கலம் பகுதியில் தடுப்பணை கட்டும் விவசாயிகளின் 40 ஆண்டுகளாக கனவு : அமைச்சர் செல்லூர் ராஜூ முயற்சியால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் .
கொடிமங்கலம் பகுதியில் தடுப்பணை கட்டும்
விவசாயிகளின் 40 ஆண்டுகளாக கனவு : அமைச்சர் செல்லூர் ராஜூ முயற்சியால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் .
பூர்வாங்க பணிகளை தொடங்கிய டிடிகே கன்ஸ்டிரக்சன்ஸ் ..
மதுரை மாடக்குளம் கண்மாயில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் வினய் தலைமையில் நடந்த குறைதீர் முகாமில் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
மாடக்குளம் கண்மாயின் வரத்து கால்வாய்கள் 35 ஆண்டுகளாக துார்ந்துள்ளது. இக்கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல கொடிமங்கலம் வைகை ஆற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்து இருந்தது .நிலையூர் கால்வாயில் இருந்து துவரிமான், மாடக்குளம் கண்மாய்களுக்கு தண்ணீர் எடுப்பதால் இரு கிராம மக்களுக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது. 2000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்ற மாடக்குளம் கண்மாய் தற்போது 1850 ஏக்கர் நிலம் பிளாட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கண்மாயை சுற்றிலும் 37 ஆயிரத்து 500 போர்வெல்கள், ரயில்வே சார்பில் ஐந்து ராட்சத போர்வெல்கள், திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிக்கு கண்மாயில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த கண்மாயில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தனர் .அப்போது பதில் அளித்த பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செல்வம் ,மாடக்குளம் வரத்து கால்வாய்கள் துார்ந்தது உண்மை தான். தற்போது 12 கி.மீ., தொலைவிற்கு வரத்து கால்வாய் புனரமைக்கப்பட்டுள்ளது.
கொடிமங்கத்தில் தடுப்பணை கட்ட நிதி கோரி நபார்டு வங்கிக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. நிதி வந்ததும் உடன் தடுப்பணை கட்டப்படும். தடுப்பணை மூலம் மாடக்குளம் கண்மாய்க்கு மட்டும் தண்ணீர் எடுக்கப்படும். துவரிமான் கண்மாய்க்கு தண்ணீர் எடுக்க மாற்று திட்டம் ஏற்படுத்தப்படும் என தெரிவித்து இருந்தார் .
இதன்படி கொடிமங்கலம் வைகை குறுக்கே ரூ.17 கோடி மதிப்பில் 180 மீட்டர் நீளம், 6 மீட்டர் உயரத்தில் தடுப்பணை அமைத்திடும் பணியினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் சென்னையில் இருந்து தொடங்கி வைத்தார் .அங்கு நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலை வகித்தார் .மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வினய் முன்னிலை வகித்தார் .தடுப்பணை கட்டப்படும் பகுதியில் கட்டுமான துறையில் அனுபவம் வாய்ந்த டிடிகே கன்ஸ்டிரக்சன்ஸ் நிறுவனத்தார் பூர்வாங்க பணிகளை தொடங்கினர் .கம்பெனி நிறுவனர் தனிக்கொடி,நிர்வாக இயக்குநர் சிவகுமார் ,சங்கர் ,பொறியாளர் சின்னா மற்றும் பலர் கலந்து கொண்டனர் .பூமி பூஜை நடைபெற்று ஜே சி பி இயந்திரம் மூலம் பணிகள் தொடங்கப்பட்டது ..ஓராண்டுக்குள் இப்பணி முடிந்து விவசாயிகளின் பயன்பாட்டுக்கு வர உள்ளது .