மதுரை சரவணா மருத்துவமனை, சூர்யா தொண்டு நிறுவனம் சார்பாக தயான் சந்த் விருது பெற்ற ரஞ்சித் குமாருக்கு டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ., நடத்திய பாராட்டு விழா

 



மதுரைக்கு பெருமை சேர்க்கும் விதமாக மாற்றுதிறனாளியான  ரஞ்சித் குமார் இந்திய அரசின் உயரிய வாழ்நாள் சாதனையாளர் விருதான தயான் சந்த் விருதினை பெற்றுள்ளார். அவருக்கு சரவணா மருத்துவமனை மற்றும்  சூர்யா தொண்டு நிறுவனம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.



இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக  திகழும்  ரஞ்சித் குமார் அவர்கள் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தேசிய அளவிளான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மேலும் அவரை  போன்றே சாதிக்க துடிக்கும் பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளித்தும் வருகிறார். அவரை தற்போது இந்தியா அரசாங்கம் தயான் சந்த் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மதுரைக்கு பெருமை சேர்த்த அவருக்கு பாராட்டு விழா நடத்துவது எங்களுக்கு  பெருமையே!.


கழகத் தலைவர்  தளபதியார் , இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆகியோர் ரஞ்சித்குமாருக்கு பாராட்டு தெரிவித்திருந்தனர்.  ஊனமுற்றவர்கள் என்ற பெயரினை "மாற்றுத்திறனாளிகள்" என்று மாற்றி அவர்களுக்கென தனி துறையினை உருவாக்கியவர் கலைஞர். மாற்றுத்திறனாளிகள் நலனில் என்றும் அக்கறையுடன் இருப்பது திமுக மட்டுமே என்பதை அனைவரும் அறிவர்.


வெளி மாநிலங்களில் இது போன்ற சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் Sponsorship அளிக்கிறது. ஆனால் தமிழகத்தில் அவ்வாறான சூழ்நிலை இல்லை. எனவே அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொண்டுள்ளம் கொண்டவர்கள் இவரைப் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு Sponsorship வழங்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.



15 ஆண்டுகளுக்கு முன்பே எங்களது  தொண்டு நிறுவனத்தின் மூலம் போலியோவால் பாதிக்கப்பட்ட அவருக்கு காலிப்பர் வழங்கியுள்ளேன். தற்பொழுது பாராட்டு விழாவில் 50000/- ரூபாயினை அன்பளிப்பாக வழங்கி மேலும் அவர் பயிற்சி அளிக்கும் இரண்டு மாற்றுத்திறனாளிகள் கணேஷ், மனோஜ் ஆகியோருக்கு Sponsorship வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளேன் என பாராட்டு விழாவின் போது டாக்டர் சரவணன் தெரிவித்தார்


Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :