மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணைந்தனர்
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம் வெள்ளோடு பகுதியில் கொ.ம.தே.க மற்றும் திமுகவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியம் மாவட்ட பொதுச்செயலாளர் குரு.குணசேகரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். மாவட்ட துணை தலைவர் சின்னதுரை, ஒன்றிய தலைவர் திருமலைச்சாமி, எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் பெரியசாமி, இளைஞரணி நிர்வாகிகள், ஒன்றியம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் உள்ளனர்.