3 கோடி ஊழல் : செயல் அலுவலரை கைதுசெய்ய வலியுறுத்தி பாஜக வலியுறுத்தல்
ஈரோடு கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் பற்றி பாஜக மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியம் அரசு தொடர்பு துறை மாவட்ட தலைவர் சக்தி சுப்பிரமணியன் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பில், திருக்கோயிலில் 3 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக செயல் அலுவலர் முத்துசாமி மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடுத்தும் இதுவரை எந்தவிதமான கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதே போல பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற இவர் மட்டும் காரணமாக இருக்க வாய்ப்பில்லை மேலதிகாரிகள் துணையோடு நடந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. இவர் பணியாற்றிய அனைத்து கோயில்களின் கணக்குகளை சரிபார்த்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.