கோவிட் -19 தொற்றுக் காலத்தில் உங்கள் இதய நோய்க்கான சிகிச்சையை புறக்கணிக்காதீர்கள்: உலக இருதய தினத்தில் - டாக்டர் ஏ. மாதவன் தகவல்

 உலக இதய தினத்தை செப்டம்பர் 29 முன்னிட்டு, ஹன்னா ஜோசப் மருத்துவமனையின் இருதய அறிவியல் இயக்குநரான டாக்டர் ஏ. மாதவன், இந்தியாவில் உள்ள இதய நோயாளிகளுக்கு சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் பொருட்டு  உங்களுக்கு கிடைக்கக்கூடிய அதிநவீன சிறந்த இருதய பராமரிப்பிற்கான தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திட விரும்புகிறார்.


தெற்கு மற்றும் கிழக்கு தமிழ்நாட்டில் இண்டெர்வென்ஷனல் இருதயவியல் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள முன்னோடி டாக்டர்களில் ஒருவர் தான் டாக்டர்.ஏ. மாதவன், இவரே ஜூன் 2000 இல் முதன்முதலில் பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டியை செய்தவர் ஆவார். சீனியர் இண்டெர்வென்ஷனல் இருதயநோய் நிபுணராக அப்பல்லோ குழுவுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் மற்றும் மதுரையில் உள்ள இதய கேத் ஆய்வகத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர். அவர் 2015 இல் வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் கேத் லேப்ஸ் மற்றும் இருதயவியல் துறையின் நிறுவன இயக்குநரானார். டாக்டர் மாதவன் ஜெனீவாவை  மையமாகக் கொண்ட உலக இதயத்திற்கான கூட்டமைப்பின் சான்றளிக்கப்பட்ட இருதயநோய் நிபுணர் ஆவார், இலாப நோக்கற்ற அமைப்பான ஆக்டிவ் ஹார்ட் பவுண்டேஷனின் நிறுவனரான டாக்டர் மாதவன், நோபல் பரிசு பெற்ற டாக்டர் பெர்னார்ட் லவுனுடன் இணைந்து MAPCHES  என்ற ஆராய்ச்சி திட்டத்திலும் பணியாற்றியுள்ளார்


இது போன்ற நோய்த்தொற்று பரவல் காலங்களில் உங்களுக்கு இதயம் சார்ந்த பிரச்சனைகள் இருந்தால் அல்லது ஒருவேளை ஸ்டென்டிங் போன்ற சிகிச்சை முறைகளுக்கு நீங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலோ அதை தாமதப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டாம் மேலும் கடந்த ஆறு மாதங்களாக பல இதய நோயாளிகளை உற்று நோக்கியதில், சரியான நேரத்தில் மருத்துவமனையை அணுகாததால் அதில் பெரும்பாலானோர் பெரும் ஆபத்தையோ அல்லது உயிர் போகும் நிலையையோ அடைந்துள்ளார்கள் என்று ஹன்னா ஜோசப்பில் ஒரு பிரத்யேக நவீன இருதய மையத்தை நிறுவி அதில் பணியாற்றும் டாக்டர் மாதவன் எச்சரிக்கிறார்.


Popular posts
நாள்பட்ட தீவிர சிறுநீரக நோய் – சத்தமில்லாமல் கொல்லும் கொடிய நோய்
Image
பாஜக சார்பில் எலத்தூர் பேரூராட்சி பகுதிகளில் ஆயுஷ்மான் பாரத் வழங்கல்
Image
செல்லம்பட்டி ஒன்றியத்தில் கழகத் தலைவரின் விழியசைவில் வெற்றிகரமாக நடைபெறும்  இணைய  வழி உறுப்பினர் சேர்க்கை : கிராமம் கிராமமாக ஆர்வத்துடன் திமுகவில் உறுப்பினராகும் பொதுமக்கள் 
Image
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 26.50 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேன் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
Image
மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை : தலைவர் பி.ராஜசேகரன் பேட்டி
Image