சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம் கொரோனா தொற்றிலிருந்து பூரண நலம் பெற வேண்டி அதிமுகவினர் சிறப்பு பூஜை.
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தொகுதி மக்கள் அனைவருக்கும் வீடு வீடாகச் சென்று நிவாரண பொருட்கள் வழங்கி சிறப்பாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டி மதுரை மேற்கு ஒன்றியம் அதலை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராமலிங்க சுவாமி கோவிலில் ஒன்றிய கவுன்சிலர் ஜெகதா ராதாகிருஷ்ணன் தலைமையில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கூட்டுறவு சங்க தலைவர் மலர் கண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு தண்டனை ஆனந்த், மற்றும் கிளை செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் உடனிருந்தனர்.