அலங்காநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள் - பிடித்து வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை

 மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வாவிடமருதூர் ஊராட்சியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இவை அனைத்தும் ஊருக்குள் புகுந்து வீடுகளில் உள்ள பொருட்களை தூக்கி செல்வதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.


  


பகல் நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் இந்தக் குரங்குகள்  மொத்தமாக  வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்கள், பாத்திரங்கள், துணிகள், உள்ளிட்டவை தூக்கி கொண்டு செல்கின்றன.


  


தண்ணீர் குடம், தொட்டில், அனைத்தையும் கலக்கி விடுவதாகவும் இதனால் சிரமம் ஏறப்பட்டுள்ளதாகவும், கிராம மக்கள் பார்த்து விரட்டினால் கடிக்க வருவதாகவும் கூறுகின்றனர்.


 
இதுகுறித்து வாவிடமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு கூறியதாவது. 
கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேலாக இந்த குரங்குகள் இந்த கிராமத்தில் இருக்கிறது. ஆற்றங்கரை அருகே உள்ள புளிய மரத்தில் காலையிலும், இரவிலும் தங்கி கொண்டும் பகல் நேரத்தில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி பொருட்களைத் தூக்கிக் கொண்டு செல்வதாகவும் பலமுறை இந்த குரங்குகளை பிடிக்க வனத்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும், தகவல் கொடுத்ததாகவும் இந்தக் குரங்குகளைப் பிடிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.


 ஊருக்குள் புகுந்த குரங்குகள் சிறுவர்களை கடிக்க விரட்டுவதாகவும் இதனால் பொதுமக்கள் பயத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த குரங்குகளை உடனடியாக பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.