சந்தைக்கான கருவி தயாரிப்போருக்காக பிரத்யேகாமாகத் தயாரிக்கப்பட்டுள்ள மைக்ரோ எஸ்டி கார்ட்


 


நெட்வொர்க் எட்ஜில் காணொலி மற்றும் ஏஐ பகுப்பாய்வுகளுக்கான சேமிப்பை அதிகப்படுத்த வேண்டிய அவசியமான தேவையை நிறைவு செய்ய,  முன்னணி தரவு கட்டமைப்பு நிறுவனமான வெஸ்டர்ன் டிஜிடல் கார்பொரேஷன் (நாஸ்டாக்:டபிள்யூடிசி), மெயின் ஸ்ட்ரீம் கண்காணிப்பு கேமரா சந்தைக்கான கருவி தயாரிப்போர், மறுவிற்பனையாளர் மற்றும் நிறுவுவோர் ஆகியோருக்காகப் பிரத்யேகாமாகத் தயாரிக்கப்பட்ட டபிள்யூடி பர்ப்பிள் எஸ்சி க்யூடி 101 அல்ட்ரா எண்ட்யூரன்ஸ் மைக்ரோ எஸ்டி கார்ட்-ஐ அறிமுகப்படுத்தியது.  டபிள்யூடி பர்ப்பில் எஸ்சி க்யூடி 101 மைக்ரோ எஸ்டி கார்ட்-இல்  வெஸ்டர்ன் டிஜிடலின் மேம்பட்ட 96 அடுக்கு 3டி என்ஏஎன்டி தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. வளரும் கண்காணிப்புப் காணொலிச் சந்தைக்காகக் குறைந்த செலவில் அதிக ஆற்றல், அதிகச் செயல்பாடு, அதிகச் சேமிப்பு ஆகியவற்றின் கலவையுடன் இதன் திறன் 512 ஜிபி* (32ஜிபி, 64ஜிபி, 128ஜிபி, 256ஜிபி, 512ஜிபி) வரை ஆகும்.


 


இது குறித்து வெஸ்டர்ன் டிஜிடல் இந்தியா, சேனல் சேல்ஸ், இயக்குனர், காலிட் வானி கூறுகையில் பொது பாதுகாப்பு மற்றும் ஏஐ பகுப்பாய்வுத் தேவைகளுக்கான அதிக ஆற்றல், அதிக திறன், உறுதி, ஆன்-கேமரா சேமிப்பை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.  இத்தேவையை நிறைவு செய்யவே டபிள்யூடி பர்ப்பிள் எஸ்சி க்யூடி 101 மைக்ரோ எஸ்டி அகர்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.


 


வெஸ்டர்ன் டிஜிடல் இந்தியா சந்தையியல் இயக்குனர் ஜெகந்நாதன் செல்லையா பேசுகையில் ஒட்டு மொத்தக் கண்காணிப்பு மற்றும் ஸ்மார்ட் வீடியோ சூழலமைவில் சேமிப்பு மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது.  தேவைப்படும் போது எளிதான பகுப்பாய்வுக்கு உயர் தரம்,  அதிக ஆற்றல், உறுதியான ஆன்-கேமரா சேமிப்பு என வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் தேவைகளில் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.   குறைந்த பராமரிப்புச் செலவு, தரம் மற்றும் எண்ணிக்கையில் அதிக திறனை வெளிப்படுத்தும் வகையில் எங்களது டபிள்யூடி பர்ப்பிள் அல்ட்ரா என்ட்யூரனஸ் மைக்ரோ எஸ்டி கார்ட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன’ என்றார்.


 


24/7 நேரப் பயன்பாடு, ஹை-டெஃபனிஷன் கண்காணிப்பு அமைப்புகள், குறைந்த பிட்-விகிதம் பதிவு ஆகியவற்றுக்கு நிறுவனங்கள் டபிள்யூடி பர்ப்பிள் மைக்ரோ எஸ்டி கார்ட்-ஐப் பயன்படுத்தலாம். மைக்ரோ எஸ்டி கார்ட் உறுதியோடும், ஈரப்பதம் எதிர்ப்பு சக்தியுடனும், -25°C முதல் 85°C தட்ப வெப்ப நிலையில் இயங்கும் திறன் கொண்டதாகும். 24/7 மணி நேரமும் இயங்கும் மெயின் ஸ்ட்ரீம் கண்காணிப்புக் காணொலி அமைப்புகளில் நம்பகமான செயல்பாட்டை வழங்க தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட சேமிப்புக் கருவிகள் வெஸ்டர்ன் டிஜிடல் டபிள்யூடி பர்ப்பிள் ஆகும்.  இவை மிக உயர்தரத் தீர்வுகளையும், நீடித்து உழைக்கும் சேமிப்புகளையும் வழங்கும்.டபிள்யூடி பர்ப்பிள் எஸ்சி க்யூடி 101 அல்ட்ரா எண்ட்யூரன்ஸ் மைக்ரோ எஸ்டி கார்ட் சில்லரை மற்றும் மொத்த பேக்குகளாகக் கிடைக்கும். 


Popular posts
மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை : தலைவர் பி.ராஜசேகரன் பேட்டி
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image
ஃப்ளேம்  பல்கலைக்கழகம் நடத்திய உயர் தாக்க தொழில்முனைவோர் மற்றும் புதுமை  மாநாடு
Image
அலங்காநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள் - பிடித்து வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை
Image
மதுரை மத்திய தொகுதி  பகுதியில்  32வது போர்வெல் : சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
Image