அலங்காநல்லூர் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா


 


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சுற்றுவட்டார கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது .

 

அலங்காநல்லூர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதேபோல் ஐயப்பன் கோவில் அழகிய மணவாளப் பெருமாள் சன்னதியில் உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது .

புதுப்பட்டி யாதவர் சங்கம் சார்பில்  கிருஷ்ணருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பெரிய ஊர்சேரி கிராமத்தில் உள்ள கிருஷ்ணன் ஆலயத்தில் கடந்த இரண்டு நாட்களாக கோகுலாஷ்டமி விழா சிறப்பாக நடந்தது. இந்த விழாவின் முதல் நிகழ்ச்சியாக கிருஷ்ணருக்கு அலங்கார அலங்காரப் பொருள்கள் அடங்கிய ஆபரண பெட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் காலையில் கோகுல கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகமும் அன்னதானமும் நடந்தது.

 

இதேபோல் பிள்ளையார் நத்தம்கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில் கிருஷ்ணர் ஆலயத்தில் கோகுலாஷ்டமி விழா நடைபெற்றது. இந்த விழாவில் விநாயகர் கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பல வண்ண மலர்களாலும் 16 வகை வாசனை திரவியங்களால்சிறப்பு பூஜை செய்யப்பட்டது .

 

உலக மக்கள் தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபட வேண்டியும் பருவமழை பெய்து கண்மாய் குளங்கள் நிரம்பி விவசாயம் செழிக்கவும் உலக அமைதிக்காகவும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.