தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள்:சமூக இடைவெளியுடன் நலத்திட்ட,மருத்துவ உதவிகள் வழங்கி கொண்டாடி அசத்திய அவனி பகுதி தேமுதிகவினர்கடந்த 2005-ம் ஆண்டு தேமுதிகதொடங்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25-ம் தேதி எனதுபிறந்தநாளை, வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வருகிறேன். தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியைப் பின்பற்றிஅவர்களால் முடிந்த அளவு மக்களுக்கான பல்வேறு உதவிகளை ஆண்டுதோறும் செய்து வருகின்றனர்.


இந்த ஆண்டு கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை பல ஆயிரம் உயிர்களை இழந்துள்ளோம். கரோனா ஊரடங்கால் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல இந்த ஆண்டு எனதுபிறந்தநாளில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.தற்போது கரோனா காலகட்டம் என்பதால் இந்த முறை சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ‘கிராமப்புற சுகாதார திட்டத்தை’ செயல்படுத்த வேண்டும். ஒரு ஒன்றியத்தில் முன்மாதிரியாக ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து தூய்மைப்படுத்த வேண்டும். தெருக்களில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.கிராமங்கள்தோறும் கபசுரக் குடிநீர், முகக் கவசம், கையுறை, சோப்பு, சானிடைசர் வழங்குவது, ஏழை மக்களுக்கு மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண உதவிகள், மாணவ,மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் போன்றவற்றை வழங்க வேண்டும்.குடியிருப்புகள், சாலைகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவது, விபத்தை தவிர்க்கும் வகையில் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசுவது, கரோனா மருத்துவ உபகரணங்களை வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்து இருந்தார்.


 


இதனை பின்பற்றி அவனியாபுரம் பகுதி தேமுதிக செயலாளர்  விஎம் செந்தில்குமார் :சமூக இடைவெளியுடன் நலத்திட்ட,மருத்துவ உதவிகள் வழங்கி கொண்டாடி அசத்தினார்.இந்நிகழ்வில் விஜயகாந்த்  உருவப்படம் பொறிக்கப் பட்ட முக கவசம் வழங்கப்பட்டது. ஆயிரம் பேருக்கு மாஸ்க்குகள் வழங்கப்பட்டனர் 600 பேருக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது மற்றும் கபசுரக் குடிநீர் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட்டது


 


மாவட்ட செயலாளர் கணபதி,கழக விசாரணை குழு உறுப்பினர் அழகர்சாமி, மாவட்ட அவைத் தலைவர் தனபnண்டியன் வரவேற்புரை ஆற்றினார்.  தலைமை பொதுக்குழு உறுப்பினர் சேதுராமன், ராஜமாணிக்கம் 94வது செயலாளர் அன்பு மூலப்பொருள், வெற்றி கண்ணன், சுரேஷ் குமார், அன்புசெழியன், பகுதி பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி பகுதி பிரதிநிதி கண்ணன் பகுதி துணைச் செயலாளர்மற்றும் பலர் கலந்து கொண்டனர்


Popular posts
மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை : தலைவர் பி.ராஜசேகரன் பேட்டி
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image
ஃப்ளேம்  பல்கலைக்கழகம் நடத்திய உயர் தாக்க தொழில்முனைவோர் மற்றும் புதுமை  மாநாடு
Image
மதுரை மத்திய தொகுதி  பகுதியில்  32வது போர்வெல் : சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
Image
கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஈஷா வளாகத்தை பயன்படுத்தி கொள்ள ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அறிவிப்பு
Image