புது ஜெயில் ரோடு மின் கம்பங்கள் இடமாற்றம்: 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பணியை தொடர் முயற்சிகளால் வென்றெடுத்த மதுரை மத்திய தொகுதி எம் எல் ஏ பழனிவேல் தியாகராஜன்
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் உள்ள புதுஜெயில் சாலையில் நடுவில் இருந்து மின்கம்பங்களை இடமாற்றம் செய்திடாமல் கடந்த 10.ஆண்டுகளுக்கும் மேலாக பணி கிடப்பில் போடப்பட்டு இருந்தது. கடந்த 2010.ஆம் ஆண்டு காமராஜ் மதுரை நகரின் ஆட்சியராக இருந்தபோது அரசரடி - காளவாசல் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்க, ரோட்டின் நடுவே தடுப்பு அமைக்கவும், சாக்கடை கால்வாயை குறுகலாக மாற்றவும்உத்தரவிட்டார்.
அரசரடி சிக்னல் பகுதியில் ரவுண்டானா அமைப்பதோடு, ஒரு வழிப்பாதையாக மாற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு கூறினார். அதன் பிறகும் கூட இப்பகுதியில் விபத்து குறைந்த பாடில்லை. அதன் பின்னர் மாநகராட்சி பராமரிக்கும் புதுஜெயில் ரோடு சிக்னலில் இருந்து சிறை வரை பல ஆண்டுகளாக இடதுபுறம் மணல் குவியல் இருந்தன . அதன் வலதுபுறம் இருந்த பூங்கா அகற்றப்பட்டு இந்த ரோடு அகலப்படுத்தப்பட்டது. அகலப்படுத்தப்பட்ட இடம் தனியார் பஸ்கள், டூரிஸ்ட் பஸ்கள் பார்க்கிங் பகுதியாக மாறி இருந்தது. ரோட்டின் நடுவே மின்கம்பங்கள் அப்படியே இருந்தன. இதை தவிர்க்க, மின்கம்பங்களை ரோட்டோரம் மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் பிறகு மதுரையில் முரட்டன்பத்திரியில் தொடங்கி அரசரடி வரை உள்ள சாலையின் நடுவில் மின் கம்பங்கள் உள்ளன. இப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதோடு சாலையின் ஓரத்திற்குமின் கம்பவங்கள் மாற்றப்படவில்லை. சாலையின் நடுவில் மின் கம்பங்கள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் மின் கம்பங்களில் வாகனங்கள் மோதிவிபத்துகளும் ஏற்படுகிறது.
சாலையின் நடுவிலுள்ள மின் கம்பங்களை உடனடியாக மாற்றவேண்டுமென ஆணையாளர் அனீஷ் சேகரை சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். அவரும் அதற்கான பணிகளைத் தொடங்கி விரைவில் முடிப்பதாக உறுதியளித்ததோடு சரி அந்தப்பணிகள் நடைபெறவே இல்லை.
மதுரை புது ஜெயில் சாலையில் சிறைச்சாலையின் எதிரில் அமைந்துள்ள மின்கம்பங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. இதனை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மூலம் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜனுக்கு கோரிக்கை வைத்தனர்.
உடனடியாக விரைந்து செயல்பட்ட அவர் மின்வாரிய செயற்பொறியாளரின் கவனத்திற்கு இதனை உடனே கொண்டு சென்றார். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதில் வர அதற்கான செலவின தொகையை தெரிவிக்கும்படி கேட்டதோடு, தமது தொகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பல்வேறு மின்கம்பங்கள் குறித்து சட்ட சபையில் உரை நிகழ்த்தியதோடு மின் துறை அமைச்சரின் கவனத்தை ஈர்த்தார். சேதமடைந்த நிலையில் இருந்த மின் கம்பங்களை சரி செய்தும் கொடுத்தார். அந்த வரிசையில் சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்கள் மாற்றப்பட வேண்டும் என தொடர் முயற்சி மேற்கொண்டார் .
இத்தனை வருட தாமதங்களை தாண்டி முதல்வர் வருகைக்கு பிறகு சென்னைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இந்த மின்கம்பங்கள் மாற்றம் செய்யப்பட்டபணிகள் நடந்து இருந்தாலும் இதற்கென தொடர் முயற்சி எடுத்த மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.