கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் போராளிகளை கௌரவிக்க போலீஸ் பேண்டு வாத்திய நிகழ்ச்சி: மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தகவல்


 


கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் போராளிகளை கௌரவிக்க போலீஸ் பேண்டு வாத்திய நிகழ்ச்சி, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய்  தெரிவித்துள்ளார்.இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்திலின்படி, மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சம் மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து சுதந்திர தின முன்னோட்ட நிகழ்வாக, கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் அனைத்து துறை போராளிகளை கௌரவிக்கும் வகையில் இந்தியா முழுவதும் இந்திய சுதந்திர போராட்டத்தில் இடம் பெற்ற பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நேரடி ஒளிபரப்பாக இந்திய ராணுவம், கப்பல் படை, விமானப்படை மற்றும் காவல் துறையினர் பங்குகொள்ளும் பேண்டு வாத்திய நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து தூர்தர்ஷன் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றது.மதுரையில் தமிழக அரசுடன் இணைந்து வருகின்ற ஆகஸ்ட் 13-ம் தேதி மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை போலீஸ் பேண்டு வாத்திய குழுவினரின் இந்த நிகழ்ச்சியை வரலாற்று சிறப்பு மிக்க திருமலை நாயக்கர் அரண்மனையில் பொதிகை தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது என தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியின் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமலை நாயக்கர் அரண்மனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.செல்வராஜ் அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இராஜசேகரன், மதுரை தூர்தர்ஷன் நிலைய இயக்குநர் ரவி, நிலைய ஒருங்கிணைப்பாளர் முரளி, தொல்லியல் துறை உதவி இயக்குநர், மதுரை மாநகராட்சி செயற்பொறியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.


Popular posts
கொரானா ஊரடங்கால் ஹோட்டல் செல்ல முடியவில்லை என்ற கவலையை போக்கிடும் சாய் ஹோம் புட் அண்ட் கேட்டரர்ஸ்
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image
ஃப்ளேம்  பல்கலைக்கழகம் நடத்திய உயர் தாக்க தொழில்முனைவோர் மற்றும் புதுமை  மாநாடு
Image
அலங்காநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள் - பிடித்து வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை
Image
மதுரை மத்திய தொகுதி  பகுதியில்  32வது போர்வெல் : சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
Image