ரேஷன் கடைகளில் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு :திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார்

 


 


மதுரை மத்திய தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ததோடு பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.


ஏஏ ரோடு ஆரப்பாளையம்  பகுதியில் அமைந்துள்ள பாண்டியன் கூட்டுறவு சிறப்பங்காடி ,எஸ்.எஸ் காலனி ஜானகி நாராயணன் தெருவில் அமைந்துள்ள பாண்டியன் கூட்டுறவு சிறப்பங்காடி, வார்டு எண்  84  தானப்ப முதலி தெருவில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சி துப்புரவு பணியாளர் பண்டக சாலை ஆகிய கடைகளில் ஆய்வு செய்தார்


பின்னர் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அவர்


71 வது திட்டப்பணியாக காலை  மணிக்கு வார்டு 86 கிரைம் பிரான்ச் பகுதியில் 8.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும்


 
72 வது திட்டப்பணி யாக  வார்டு 78 மேல வாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அங்கன் வாடி சுற்றுச்சுவரையும் .73 வது திட்டப்பணியாக வார்டு  77  ஜெ.ஆர் ரோடு பகுதியில் 4.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்,74 வது திட்டப்பணியாக வார்டு 77 இராமலிங்க நகர்  4.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் ஆகியவற்றை திறந்து வைத்தார் .


Popular posts
கொரோனாவால்  சரிந்துள்ள  பொருளாதாரத்தை மீட்கவும், மத்திய மாநில அரசுகள் நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை  செயல்படுத்த விரைந்து  நடவடிக்கை  எடுக்க பொறியாளர் ஏசி காமராஜ் வலியுறுத்தல் 
Image
அலங்காநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள் - பிடித்து வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை
Image
ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் மற்றும் வி. சுக்ரா மனநல ஆலோசனை மையம் ஆகியோர் ஒன்றிணைந்து தற்கொலையை தடுக்கும் பணி
Image
ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image