கொரோனாவால்  சரிந்துள்ள  பொருளாதாரத்தை மீட்கவும், மத்திய மாநில அரசுகள் நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை  செயல்படுத்த விரைந்து  நடவடிக்கை  எடுக்க பொறியாளர் ஏசி காமராஜ் வலியுறுத்தல்  

தற்போது தென் மேற்கு பருவமழை கேரளாவில் நன்குபெய்து வருகிறது. அது  இன்னும் ஒரு சிலதினங்களில் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும்  அதனால் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழைபெய்யும் என தமிழக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் நமக்கு கிடைக்கும் மழை நீரை சேமித்தாகவேண்டிய அவசியத்தில் நாம் உள்ளோம்.நம்மில் எத்தனை பேருக்குத் தெரிகிறது  வருடந்தோறும் வறட்சி, குடிநீர்பற்றாக்குறை எனக் கூறும்   நம்  தமிழகத்தில் மட்டும் சராசரியாக 177 டி.எம்.சி.  தண்ணீர் வெள்ளமாக பெரும்சேதாரத்தை ஏற்படுத்திவிட்டு கடலுக்கு போகிறதென்று. (தமிழக அரசின் புள்ளிவிபரம்).  ஆக நமக்கு போதுமான  சிறிது தண்ணீர் ஆண்டுதோறும் கிடைக்கிறது என்பதுதெளிவாகிறது. இவ்வாறு ஆண்டுதோறும்  நமக்குகிடைக்கும் வெள்ள நீரைத்  தேக்கி உபயோகிக்கநாம்  இருக்கும் நீர்நிலைகளைமேம்படுத்துவதோடு  தொலை நோக்குசிந்தனையுடன்  புதிய  நீராதாரங்களை உருவாக்குவது என்பது மிக மிகஅவசியம். அதற்காக கொடுக்கப்பட்டதுதான் தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலைத் திட்டம் . இது  கங்கா - குமரி தேசிய நீர்வழிச்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.  பெருந்தலைவர் காமராஜ் அவர்களது 9 வருட ஆட்சியில்தமிழகத்தில் 17 அணைகள் கட்டப்பட்டது. ஏராளமான மின்சாரம் கிடைத்தது. தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலைஎனும் ஒரு திட்டத்தில் மட்டும்  இந்தஅணைகள் அனைத்திலும் தேக்கும் அளவு தண்ணீரை தேக்க முடியும்.  மின்சாரமும்கிடைக்கும்.தமிழக அரசு தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலைத்திட்டம் நிறைவேற்றப்படும்  என தேர்தல் அறிக்கையில் உறுதி கொடுத்துள்ளது .

 

ஆயினும் தமிழக அரசு நவீன நீர்வழிச்சாலைத் திட்டம் குறித்து  ஆய்வறிக்கை தயாரித்திட நிதி ஒதுக்குவதில்கால  தாமதமாகிறது.  எனவே கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம் நாளை தண்ணீர் பற்றாக்குறையால்பாதிக்கப்படுவதை தவிர்க்க தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலைத்திட்டம் குறித்துவிரைந்து  முடிவெடுக்க வேண்டும். 

இதற்கிடையில்  கோதாவரி காவிரி  பிணைப்பை நவீன நீர்வழிச்சாலை மூலம் செயல்படுத்திடமத்திய ஜல் சக்தி அமைச்சகத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்

 


 

. மத்திய ஜல் சக்தி துறை  அமைச்சர்திரு. கஜேந்திர சிங் செகாவத்  அவர்களைஇதற்காக இருமுறை சந்தித்துள்ளோம். அவரும் அதற்கு  ஆவன செய்வதாக  உறுதியளித்துள்ளார். பாராளுமன்ற தலைமைச் செயலகமும் எங்கள் கோரிக்கையை ஏற்று இத்திட்டம் குறித்துவிரைந்து  நடவடிக்கை  எடுக்க மத்திய ஜல் சக்தி  துறைக்கு பரிந்துரைத்துள்ளது. கோதாவரி காவிரி  பிணைப்பு நிறைவேறும்பொழுது  தமிழகம் உட்பட ஆந்திரா, தெலுங்கானா , மகாராஷ்டிரா ஆகிய4 மாநிலங்களுக்கும் இன்னும் ஏராளமான தண்ணீர் கிடைக்கும். அதன் மூலம்குடிநீர் , பாசனம் , மின்சாரம், புதிய  வேலைவாய்ப்பு என  ஏராளமான பலன்களை அடைய முடியும் .

 

கொரோனாவினால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவிலிருந்துநம் நாட்டை மீட்க இத்திட்டம் பேருதவியாக இருக்கும் என்பதே பெரும்பாலானவல்லுனர்களின் கருத்து. ஏனென்றால், தண்ணீரே  ஒரு நாட்டின் விவசாயம் , தொழில், அனைத்து வளர்ச்சி, முன்னேற்ற   மற்றும் பொருளாதார  உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிப்படை  பிரதானம் என பொறியாளர் ஏசி காமராஜ் வலியுறுத்தி உள்ளார்Popular posts
செல்லம்பட்டி ஒன்றியத்தில் கழகத் தலைவரின் விழியசைவில் வெற்றிகரமாக நடைபெறும்  இணைய  வழி உறுப்பினர் சேர்க்கை : கிராமம் கிராமமாக ஆர்வத்துடன் திமுகவில் உறுப்பினராகும் பொதுமக்கள் 
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image
நாள்பட்ட தீவிர சிறுநீரக நோய் – சத்தமில்லாமல் கொல்லும் கொடிய நோய்
Image
கொரானா ஊரடங்கால் ஹோட்டல் செல்ல முடியவில்லை என்ற கவலையை போக்கிடும் சாய் ஹோம் புட் அண்ட் கேட்டரர்ஸ்
Image