கவிப்பேரரசு வைரமுத்து 67வது பிறந்த நாள்: வெற்றித் தமிழர் பேரவை சார்பில் முக கவசம்


கவிப்பேரரசு வைரமுத்து 67வது பிறந்த நாளினை முன்னிட்டு மதுரை சொக்கிகுளம் உழவர் சந்தையில் வெற்றித் தமிழர் பேரவை சார்பில்  விவசாய பெருங்குடி மக்களுக்கும், பொது மக்களுக்கும் முக கவசம் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மாவட்ட  வேளாண்மை வணிக துணை இயக்குநர் விஜயலெட்சுமி தலைமையில் சொக்கிகுளம் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ஸ்ரீதர், முன்னாள் நிர்வாக அலுவலர் ஆறுமுகம், உதவி  அலுவலர் ரமீலா,பணியாளர் திராவிட மாரி, வெற்றித் தமிழர் பேரவையை சார்ந்த ஜான் சுந்தர ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.