தமிழகத்தில் மீண்டும் ஷோரூம்களை திறந்த மலபார் கோல்டு அன்ட் டைமண்ட்ஸ்

வாடிக்கையாளர்கள், ஊழியர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க
முன்னெச்சரிக்கை, கண்டிப்பான விதிமுறைகளை கடைபிடிக்கிறதுஇந்தியாவில் தங்கம் மற்றும் வைர விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமான மலபார் கோல்டு அன்ட் டைமண்ட்ஸ் தமிழகத்தில் மீண்டும் தங்கள் ஷோரூம்களை அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி திறந்துள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை பீனிக்ஸ் மால் மற்றும் மதுரையில் விஷால் டி மால் தவிர அனைத்து ஷோரூம்களும் கட்டாய நெறிமுறைகள் மற்றும் வாடிக்கையாளர்கள், ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விரிவான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுடன் செயல்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.அனைத்து ஷோரூம்களில் உள்ள தளங்கள், இருக்கைகள், கதவுகள், ஸ்வைப்பிங் எந்திரங்கள், பொருட்கள் அனைத்திலும் தினந்தோறும் கிருமினி நாசினி தெளிக்கப்படுகிறது. அனைத்து கவுண்டர்களிலும் வாடிக்கையாளர்களுக்கான இருக்கைகள் சமூக விலகலை கடைபிடித்து தளங்களில் போதிய இடைவெளி விட்டு வட்டமிடப்பட்டு மாற்றப்பட்டுள்ளன. இதேபோல் பணம் செலுத்தும் இடத்திலும் போதிய இடைவெளி விடப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் ஒருவொருக்கொருவர் போதுமான இடைவெளியை பராமரிக்க முடியும்.


இதேபோல் ஷோரூம்களில் உள்ள பணியாளர்கள் வேலை நேரம் முழுவதும் கையுறைகள் மற்றும் முகக்கவசங்களை அணிந்து கொண்டிருப்பார்கள். மேலும் அவர்கள் சானிடைசரை தவறாமல் பயன்படுத்துகின்றனர். ஊழியர்களின் உடல் வெப்பநிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ஷோரூம்களில் நுழையும் முன், அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மற்றும்  சானிடைசர் வசதி அனைத்து ஷோரூம்களிலும் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகையையும் ஒவ்வொரு வாடிக்கையாளர் பார்த்த பிறகு அவை அனைத்தும் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன.
அனைத்து ஷோரூம்களின் உள்புறத்தில், வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பான முறையான அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.


வாடிக்கையாளர்கள் ஷோரூம்களில் நுழையும் முன் கைகளை சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்துதல், முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப பரிசோதனை செய்தல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை குறித்து அங்கு அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் எம்பி அகமது கூறுகையில், மாநில அரசின் முறையான அனுமதியை பெற்றதைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் எங்கள் ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் எங்கள் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான நெறிமுறைகளைப் பின்பற்றுகிறோம். எங்களின் அனைத்து ஷோரூம்களிலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான வாங்கும் அனுபவத்தை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
www.malabargoldanddiamonds.com. என்ற மலபார் கோல்டு அன்ட் டைமண்ட்ஸ் இணையதளம் மூலம் ஆன்லைனிலும் தங்க நகைகளை வாங்கலாம்.


Popular posts
ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
Image
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 26.50 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேன் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
Image
மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை : தலைவர் பி.ராஜசேகரன் பேட்டி
Image
பாஜக சார்பில் எலத்தூர் பேரூராட்சி பகுதிகளில் ஆயுஷ்மான் பாரத் வழங்கல்
Image
செல்லம்பட்டி ஒன்றியத்தில் கழகத் தலைவரின் விழியசைவில் வெற்றிகரமாக நடைபெறும்  இணைய  வழி உறுப்பினர் சேர்க்கை : கிராமம் கிராமமாக ஆர்வத்துடன் திமுகவில் உறுப்பினராகும் பொதுமக்கள் 
Image