கோவையில் முன்னணி தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்கியது எச்.சி.எல்
கோவிட்-19 தொற்றுநோய் பேரிடர் மேலாண்மை முயற்சிகளை  வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக எச்.சி.எல் நிறுவனம் கோவை  மாவட்ட நிர்வாகத்துடன் கைகோர்த்து மாஸ்க்குகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), கை சுத்திகரிப்புகள், ஹேண்ட்ஸ் ஃப்ரீ வாஷ் பேசின்கள் போன்ற முக்கிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது.

 

மாவட்டத்தில் உள்ள முன்னணி  தொழிலாளர்கள் ஆரோக்கியம் மற்றும் உயிர்களைப் பாதுகாப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கும். சிட்ரா மற்றும் எச்.எல்.எல் உடன் இணைந்து 7,000 பிபிஇ கருவிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை எச்.சி.எல் வழங்கியுள்ளது. 20,000 மமாஸ்குகள், 55 லிட்டர் சானிட்டைசர் மற்றும் இரண்டு ஹேண்ட்ஸ் ஃப்ரீ வாஷ் பேசின்கள் ஆகியவற்றை  மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தின் இஎஸ்ஐ  மருத்துவமனை, அரசு மருத்துவமனை, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள முன்னணி தொழிலாளர்களுக்கும் எச்.சி.எல் முக்கிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளது. 

 

இந்த ஆதரவு குறித்து கருத்து தெரிவித்த கோவை மாவட்ட ஆட்சியர் கே.ராஜமணி, “எங்கள் மக்கள் அனைவரின் நல்வாழ்வை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், ஏற்கனவே  மக்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க பல முயற்சிகளை எடுத்துள்ளோம். மக்களின் அனைத்து தேவைகளை ஒரு சுகாதார கண்ணோட்டத்தில் பூர்த்தி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் சுகாதாரப்

போர் வீரர்கள் மற்றும் பிற முன்னணி தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், பல உயிர்களை காப்பாற்றுவதற்ஞம் எங்களுக்கு உதவுகிறார்கள். எச்.சி.எல்  ஆதரவு மற்றும் அவர்களால் வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் எங்கள் முண்ணனி தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். மேலும் இந்த முக்கியமான மற்றும் சரியான நேரத்தில் அளித்த ஆதரவுக்கு எச்.சி.எல்-க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்” என்றார்.