ஆம்வே இந்தியா திண்டுக்கல் மாவட்டத்தில் அதன் மூன்றாவது தொலை மருத்துவமையத்தைத் தொடங்குகிறது

மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இந்த மையம் இந்த மாவட்டத்தில் உள்ள ஐந்து கிராமங்களுக்கு இலவச மருத்துவ உதவியை அளிக்கும்


o   ஆண்டு தோறும் இந்த மாவட்டத்தின் 20,000 கிராம வாசிகளுக்கு தொலை மருத்துவ மையங்கள் நன்மைகளை வழங்கும்


 நாட்டின் மிகப்பெரிய நேரடி விற்பனை எஃப்.எம்.சி.ஜி. நிறுவனங்களில் ஒன்றான ஆம்வே இந்தியா, தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் மேட்டுப்பட்டி கிராமத்தில் அதன் மூன்றாவது கிராமப்புற தொலை மருத்துவ மையத்தை தொடங்கியது. தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியோடு அப்பகுதி கிராம சமுதாயத்துக்கு இலவசமருத்துவ சேவைகளை வழங்குவதற்காக மையத்தை அமைத்து அதன் செயல்பாடுகளை நிர்வகிக்க மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தோடு நிறுவனம் இணைந்து செயல்படுகிறது.


கோவிட்-19 நோய்ப் பரவலை ஒட்டிநாடு முழுவதுமான முழு அடைப்பு நகர்ச்சியைத்தடுத்து மருத்துவமனைகளுக்கும் மருத்துவ மையங்களுக்கும் செல்வதில் மக்களை எச்சரிக்கையாக இருக்க வைத்தது. இத்தகைய எதிர்பாராத காலங்களில் கிராமமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து எளிதாக மருத்துவவசதிகளை அணுக தொலைமருத்துவம் உதவி செய்கிறது. இந்த திட்டத்தில் தொலைமருத்துவ மையமும் இலவச சுகாரார முகாமும் அடங்கும். இதுவரை இந்த மாவட்டத்தில் 1 லட்சம்  கிராமமக்களுக்கு  இது  நன்மை  அளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா மேட்டுப்பட்டி கிராமத்தில் ஆம்வேயின் மூன்றாவது கிராமப்புற தொலை மருத்துவ மையம் நான்கு கிராமங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த திட்டத்தைப் பற்றி மேலும் விவரித்த ஆம்வே இந்தியாவின் உற்பத்தி மற்றும் சிறப்பு திட்ட துணைத்தலைவர் திரு. ராஜீவ் தாஸ் குப்தா கூறினார்.


கிராம சுகாதாரப் பராமரிப்பு திட்டத்தின் கீழ், மூன்று தொலை மருத்துவமையங்கள், மாவட்டத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் தேர்வு செய்யப்படும் கிராமங்களின் சமுதாய மையங்களில் தொற்று நீக்கம் மற்றும் சுகாதார செயல்பாடுகளை ஆம்வே இந்தியா பொறுப்பேற்க உள்ளது. தமிழ்நாட்டின் நிலக்கோட்டையில் இருக்கும் ஆம்வே இந்தியாவின் உற்பத்தி வசதியைச்சுற்றிலும் உள்ள 15 கிராமங்களுக்கு இந்த தொற்று நீக்கும் செயல்பாடு நன்மை அளிக்கும். இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக முகமூடி, கையுறை மற்றும் சோப்பு போன்ற முக்கிய தனி நபர் சுகாதாரத் தேவைகளை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொது சேவை வழங்கும் துறைகளுக்கு ஆம்வே இந்தியா விநியோகம் செய்யும் என்று ஆம்வே இந்தியாவின், வடக்கு மற்றும் மேற்கு முதுநிலை துணைத்தலைவரான திரு. ஜிஎஸ்.சீமா கூறினார்.


Popular posts
கொரோனாவால்  சரிந்துள்ள  பொருளாதாரத்தை மீட்கவும், மத்திய மாநில அரசுகள் நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை  செயல்படுத்த விரைந்து  நடவடிக்கை  எடுக்க பொறியாளர் ஏசி காமராஜ் வலியுறுத்தல் 
Image
அலங்காநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள் - பிடித்து வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை
Image
ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் மற்றும் வி. சுக்ரா மனநல ஆலோசனை மையம் ஆகியோர் ஒன்றிணைந்து தற்கொலையை தடுக்கும் பணி
Image
ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image