மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் சித்திரைத் திருவிழா பற்றிய குறும்படத்தை - தமிழில், மே 4 அன்று ஒளிபரப்புகிறது, 'ஹிஸ்டரி டிவி18' தொலைக்காட்சி!


 


இந்தியாவிற்கான மூலமுதலான தயாரிப்புகளில் மேலும் ஒன்றாக ஹிஸ்டரி டிவி18 (HistoryTV18) முதன்முதலாக ‘மீனாட்சி அம்மன் மற்றும் தி மார்வெல் ஆஃப் மதுரை’ (Meenakshi Amman & The Marvel of Madurai) நிகழ்ச்சியை மே 4, திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு முதன்முதலில் தமிழில் ஒளிபரப்புகிறது. இதுவரை சந்தித்திராத சவாலை உலகம் எதிர்கொண்டுள்ள இவ்வேளையில், ஹிஸ்டரி டிவி18 வீட்டிலிருக்கும் சின்னத்திரைகளுக்கு சித்திரைத் திருவிழாவையும் புகழ்வாய்ந்த மீனாட்சி கோவிலையும் கொண்டுவந்து மெய்சிலிர்க்கும் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த ஒரு மணி நேர நிகழ்ச்சி திருக்கல்யாண நாளன்று முதன்முதலாக ஒளிபரப்பாகிறது.


 


மதுரையின் வரலாற்று மற்றும் கட்டிடக்கலை முக்கியத்துவத்தையும், இதன் ஆரம்ப தோற்றம், விரிவாக்கம் மற்றும் இன்றைய அமைப்பு போன்றவற்றையும் இப்படம் ஆராய்கிறது. 14 ஏக்கர் பரந்துள்ள இந்த கோவில் வளாகத்தின் கலை மற்றும் கட்டடவியல் அற்புதங்களை ஹய்-டெஃபனிஷன் (Hi-Definition) மற்றும் 4-கே (4K) மாடல் கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு, வல்லுனர்கள் மற்றும் கோவில் அதிகாரிகளின் கருத்துக்களையும், விளக்கங்களையும் எடுத்து வைக்கிறது. பிரமிக்க வைக்கும் 33,000 நுணுக்கமான சிற்பங்களும், வண்ணம் தீட்டப்பட்ட மேற்கூரைகளும், மண்டபங்களும், தூண்களும், கோவில்களும், மற்றும் ஆயிரக்கணக்கான புராண கதாபாத்திரங்களும் வினோத உயிரின சிற்பங்கள் அலங்கரிக்கும்  பதினான்கு வானுயர கோபுரங்களும் கொண்ட இந்தக் கோவில், கலைத்திறமை மற்றும் வடிவியல் துல்லியத்திற்கு சான்றாகும். அசரவைக்கும் காட்சியமைப்புககளுடனும் படத்தொகுப்புடனும் இந்தக் கதையமைப்பு, தென்னிந்தியாவிற்கே உரித்தான கைவினைத்திறனையும், பொறியியல் மற்றும் கலாச்சார மேன்மையையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.


 


ஒரு வருடம் எடுத்துக்கொண்ட இந்த மூலமுதலான தயாரிப்பு, சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான 'பட்டாபிஷேகம்', 'திருக்கல்யாணம்', மற்றும் 'தேரோட்டம்' ஆகியவற்றைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மதுரையின் வைகை ஆற்றில் லட்சக்கணக்கான மக்கள் கூடும், விஷ்ணு பெருமானுக்கு பெருமை சேர்க்கும் கள்ளழகர் விழாவும் இதில் இடம்பெறுகிறது என்று ஏ+இ நெட்ஒர்க்ஸ் டி.வி.18 (A+E Networks | TV18) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் நெட்ஒர்க்18 (Network18) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அவினாஷ் கெளல் கூறினார்.


Popular posts
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 26.50 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேன் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
Image
ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
Image
மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை : தலைவர் பி.ராஜசேகரன் பேட்டி
Image
மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற கோவிட்-19 விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நிறைவு
Image
பாஜக சார்பில் எலத்தூர் பேரூராட்சி பகுதிகளில் ஆயுஷ்மான் பாரத் வழங்கல்
Image