அனைத்து கைவினைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை


கலாச்சாரம்,பண்பாடு, பாரம்பரியம் இவைகளைபேணிக்காக்கும் ஒரு அரசு நிறுவனமாக தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம்விளங்கி வருகிறது. கைவினைஞர்களின் வாழ்வாதாரமாகவும் அடுத்த தலைமுறையினர்பின்பற்றும் வகையில் கைவினைக் கலைகளை பொதுமக்களுக்கு கொண்டு சென்று நமதுகலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் கைவினைக் கலைகள் மூலம் அவர்களுக்குஅறியப்படுத்தி, பயன்பெரும் வகையிலும் கைவினைக்கலைகள் அழிந்துவிடாமல் அதற்கு உயிர்கொடுத்து காப்பதற்கு பல முயற்சிகளை செம்மையாக பூம்புகார் நிறுவனம் செய்து வருகிறதுமேலும் கைவினைஞசர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்நோக்கத்தில் பலவகைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.


தமிழ்நாடுஅரசு நிறுவனமான பூம்புகார் விற்பனைநிலையம் வரும் 28.02.2020. முதல் 08.03.2020 வரை (ஞாயிறுஉட்பட) “அனைத்து கைவினைப் பொருட்கள்” என்ற தலைப்பில் கைவினை பொருட்கள், கைத்திறத் துணிகள், சிறப்பு கண்காட்சி ஒன்றை ஈரோடுபேருந்து நிலையம் அருகில் சத்தி மெயின்ரோட்டில் பி.வி மஹாலில் நடத்திவருகிறது.


 இக்கண்காட்சியினை ச.கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் 28.02.2020 மாலை 6.00 மணியளவில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்.                  இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக இடம்பெறும் பொருட்கள் ஐம்பொன் சிற்பங்கள், பித்தளை விளக்குகள், தஞ்சைஓவியங்கள், சந்தன மரப்பொருட்கள், ரோஸ் மரச்சிற்பங்கள், ஜெய்பூர் நவரத்தின கற்கள், முத்துநகைகள், ராசிக்கேற்ற ராசிக்கற்கள், ஐம்பொன் வளையல்கள், கொலுசுகள், அமெரிக்கன்டைமண்ட் நகைகள், பவள மாலைகள், குந்தன் கல் மாலைகள், மொராதாபாத் கலைப்பொருட்கள், ஜெய்பூர்வண்ண ஓவியங்கள், ஆயில் பெய்ண்டிங், தோல் பொருட்கள், வலம்புரி சங்குப் பொருட்கள்,அகர்பத்திகள், வாசனை திரவியங்கள், ரோஸ் மரத்தில் பதிக்கப்பட்ட சுவர் அலங்காரபேனல்கள், சகரன்பூர் மரத்தில் செய்யப்பட்ட மசாஜ் பொருட்கள், அலாய் மெட்டல், வெள்ளைஉலோகத்தால் செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள், காகிதக்கூழினால் செய்யப்பட்டபொம்மைகள், மாக்கல் விநாயகர், சந்தனக்கட்டைகள், சென்னப்பட்டனா பொம்மைகள்,சணல்பைகள், மதுரை சுங்கடி சேலைகள் மற்றும் எண்ணற்ற பரிசுப்பொருட்கள் ஒரே இடத்தில்வைக்கப்பட்டுள்ளன.                குறைந்தபட்சமாகரூ.50 முதல் அதிகபட்சம் 1.00 இலட்சம் வரையில் கைவினைபொருட்கள்  இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இக்கண்காட்சியின்மூலம் ரூ.8இலட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.கடன் அட்டைகளுக்கு எவ்வித சேவைக் கட்டணமும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படும்.அனைத்து கலைப் பொருட்களுக்கும் 10மூ சிறப்புத் தள்ளுபடி உண்டு.


இத்தகவலை மேலாளர் ஜி.சரவணன் தெரிவித்துளார்


Popular posts
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 26.50 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேன் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
Image
ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
Image
மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை : தலைவர் பி.ராஜசேகரன் பேட்டி
Image
மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற கோவிட்-19 விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நிறைவு
Image
பாஜக சார்பில் எலத்தூர் பேரூராட்சி பகுதிகளில் ஆயுஷ்மான் பாரத் வழங்கல்
Image